- Advertisement -
Homeபொழுதுபோக்குமிர்ச்சி சிவாவை வைத்து கற்றது தமிழ் ராம் இயக்கியிருக்கும் திரைப்படம்... அதற்கு இப்படி ஒரு பெயரா......

மிர்ச்சி சிவாவை வைத்து கற்றது தமிழ் ராம் இயக்கியிருக்கும் திரைப்படம்… அதற்கு இப்படி ஒரு பெயரா… இந்தத் திரைப்பட விழாவிலும் பங்கேற்கப் போகிறதா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் யதார்த்தமான திரைப்படங்களை பிடிப்பது கை தேர்ந்தவர் ராம். இவர் திரைத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் மிக குறைவான திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். இவர் அறிமுகமான திரைப்படம் கற்றது தமிழ். நடிகர் ஜீவாவுக்கு முக்கியமான திரைப்படம்.

நவீன யுகத்திற்கு இந்த தலைமுறை சென்று கொண்டிருக்க, தமிழை பட்டப் படிப்பாக பயின்ற ஒருவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும், சிறுவயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்டு இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவனின் வலி எந்த அளவில் இருக்கும் என்பதையும் தனக்கே உண்டான கோபத்தை திரைமொழியில் காட்சிப்படுத்தி இருந்தார் ராம்.

இதன் காரணமாகவே கற்றது தமிழ் திரைப்படம் இங்கு பலருக்கும் விருப்பமான காவியம். குறிப்பாக அதில் அஞ்சலியின் நடிப்பு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படி ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் உச்சம் தொட்ட கற்றது தமிழ் ராம் அடுத்ததாக, தங்க மீன்கள் திரைப்படத்தை இயக்கினார்.

தந்தைக்கு மகளுக்கும் இடையேயான உறவை மிக அழகாக காட்டிய காவியங்களில் மிக முக்கியமானது தான் தங்க மீன்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அருமையான விமர்சனத்தை பெற்றது. கற்றது தமிழ் ராம் இப்படி இரண்டு திரைப்படங்களின் மூலம் புதிய உச்சத்திற்கு சென்றாலும், அவரது படைப்புகளுக்கு வசூல் கிடைப்பதில்லை என்ற ஒரு பேச்சு மட்டும் இருந்து வந்தது.

இதனை தனது தரமணி திரைப்படத்தின் மூலம் உடைத்து எறிந்தார் ராம். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இளவட்டாரங்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதன் பிறகு மம்மூட்டியை வைத்து அவர் இயக்கிய பேரன்பு திரைப்படம் அந்த அளவு பெரியதாக ஓடவில்லை. தற்போது ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார்.

நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம், ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றது. இந்த நிலையில் தற்போது மிர்ச்சி சிவாவை வைத்து பறந்து போ என்னும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் கற்றது தமிழ் ராம். தந்தைக்கு மகனுக்குமான உறவை மையப்படுத்தி காமெடி ரகத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும் இது திரையிடப்பட இருக்கிறது.

சற்று முன்