தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்க தலைவராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். அவரது வருகையும் மக்களின் வரவேற்பும் நிச்சயமாக வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரளயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவும் குறிப்பாக ஆளுங்கட்சியாக உள்ள திமுகவுக்கு விஜய் அரசியல் பிரவேசம், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரிய தலைவலியாக மாறவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜய்க்கு எதிரான அஸ்திரத்தை தொடுக்க துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தயாராகி அதற்கேற்ப திட்டமிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் விஜய்க்கு போட்டியாளராக கருதப்படுபவர் நடிகர் அஜீத்குமார். எனவே இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் முவீஸ் தயாரிக்க முன்வந்துள்ளது. இதற்காக நடிகர் அஜீத்குமாருக்கு ரூ. 200 கோடி சம்பளம் தருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அஜீத்குமார் நடித்த பில்லா ஆரம்பம் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். அதனால் விஷ்ணுவர்தன் தனது படத்தை இயக்க அஜீத்குமார் முன்னுரிமை தருவார். அதே நேரத்தில் சமீபத்தில் நேசிப்பாயா என்ற படத்தை டைரக்ட் செய்து அதன் மூலம் ரெட்ஜெயிண்ட் முவீஸ் உடன் அதிக நெருக்கம் விஷ்ணுவர்தனுக்கு ஏற்பட்டதால், அஜீத்குமார் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு உதயநிதி தந்துள்ளார்.
நடிகர் அஜீத்குமாருக்கு ரூ. 200 கோடி சம்பளம் தர முன்வந்த உதயநிதியிடம் ரூ. 226 கோடி சம்பளம் அஜீத்குமார் தரப்பில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், விஜய் இப்போது தளபதி 69 படத்தில் நடிக்க ரூ. 225 கோடி சம்பளம் வாங்குகிறார். அவரை விட ரூ. 1 கோடி கூடுதலாக வாங்கும் நடிகராக அஜீத்குமார் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் வரை கார் பந்தயத்தில் பிஸியாக இருக்கும் அஜீத்குமார், அவர் வந்த பிறகு ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி தயாரிக்கும் புதிய படத்தில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் மூலம் அஜீத்குமாரின் ஆதரவு உதயநிதிக்குதான் என்ற தோற்றத்தை ரசிகர்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, விஜய்க்கு எதிராக ஏகேவை நிறுத்த உதயநிதி ஸ்டாலின் பிளான் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





