- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதியின் 70வது படம், தளபதி 69 ரிலீஸ் தள்ளி போகிறது… பரவிய தகவல்களுக்கு இதுதான் காரணமா?...

தளபதியின் 70வது படம், தளபதி 69 ரிலீஸ் தள்ளி போகிறது… பரவிய தகவல்களுக்கு இதுதான் காரணமா? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

கடந்தாண்டில் வெளியான தி கோட் படத்துக்கு நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 என தற்காலிக பெயர் வைக்கப்பட்ட இந்த படத்துக்கு நாளைய தீர்ப்பு என டைட்டில் வைக்கப்பட உள்ளது. இது நடிகர் விஜய் அறிமுகமாகி நடித்த முதல் படத்தின் தலைப்பாகும். அதுவே அவரது கடைசி படத்தின் தலைப்பாகவும் மாறியிருக்கிறது.

இந்நிலையில் சில தினங்களாக நடிகர் விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தளபதி 69 அவரது கடைசி படம் அல்ல, அவர் மீண்டும் ஒரு அரசியல் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கலாம். தி கோட் அல்லது லியோ படத்தின் 2ம் பாகமாக அது இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

மேலும் விஜய் நடித்து வரும் 69வது படம் இந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்ற முடிவிலும் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு 2026ல் பொங்கல் ரிலீஸாக வாய்ப்புள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. இது விஜய் ரசிகர்களை குழப்பத்தில் தள்ளியது.

இப்போது அதற்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. நடிகர் விஜய்க்கு சினிமாவில் போட்டியாளராக கருதப்படுபவர் நடிகர் அஜீத்குமார். அவர் நடிக்கும் ஒரு படத்தை 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலின் போது ரிலீஸாக செய்து, அவரது ஆதரவு திமுகவுக்கு இருப்பது போன்ற மாயையை உருவாக்க உதயநிதி ஸ்டாலின் காய்களை நகர்த்தி வருகிறார்.

அதற்காக துபாய் கார் ரேஸ் முடிந்த பிறகு சென்னை திரும்பும் அஜீத்குமாரை வைத்து, ரெட் ஜெயிண்ட் முவீஸ் தயாரிப்பில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஒரு புதிய படம் எடுக்க உள்ளனர். இந்த படத்துக்காக அஜீத்குமார் சம்பளம் 200 கோடி தர உதயநிதி முன்வந்துள்ளார். ஆனால் அஜீத் இப்போது வாங்கும் சம்பளம் 163 கோடியாக உள்ள நிலையில், 37 கோடி ரூபாய் அதிகமாக தர உதயநிதி முன்வந்துள்ளார்.

ஆனால் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க ரூ. 225 கோடி சம்பளம் பெற்றதால் அஜீத்குமார் தரப்பில் 226 கோடி ரூபாய் என, விஜயை விட அதிக சம்பளம் பெற்ற நடிகராக காட்டிக்கொள்ள கேட்டுள்ளனர். இந்த காரணங்களால்தான், அஜீத்குமார் நடிக்கும் படத்துக்கு போட்டியாக, அரசியல் களம் கொண்ட 70வது படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும், இப்போது நடித்துவரும் 69வது படத்தையே அடுத்த ஆண்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சற்று முன்