- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வில்லன் கேரக்டரில் நடிப்பீர்களா? அந்த நடிகர்களை உதாரணம் காட்டி நடிகர் பரத்...

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வில்லன் கேரக்டரில் நடிப்பீர்களா? அந்த நடிகர்களை உதாரணம் காட்டி நடிகர் பரத் சொன்ன அதிரடியான பதில்! –

- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானர் பரத். சின்ன தளபதி என அழைக்கப்படுபவர். காதல் படம் வெளியான போது பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். தொடர்ந்து கூடல் நகர் வெயில் எம்டன் மகன் முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு நேபாளி பழனி கண்டேன் காதலை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் பரத் நடித்த படங்களில் காதல் வெயில் எம்டன் மகன் உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சந்தியா அறிமுகமான காதல் படத்தில் டூவீலர் மெக்கானிக் கேரக்டரில் பரத் நடித்திருந்தார். பணக்கார காதலியை சென்னையில் இருக்கும் நண்பனிடம் அழைத்து செல்வதும், பிறகு கடைசியில் மனநலம் பாதித்தவராக மாறுவதும் படத்தை வேற லெவலில் வெற்றி பெற வைத்தது.

நல்ல நடிப்பாற்றல், நடனத் திறமை கொண்ட நடிகர் பரத்துக்கு வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. இதில் பசுபதியின் தம்பியாக நடித்திருப்பார். பாவனாவிடம் கோபப்பட்டு திட்டும் காட்சிகளிலும், அண்ணன் மீது அன்பு காட்டும் காட்சிகளிலும் அழுத்தமான நடிப்பை தந்திருப்பார்.

நாதஸ்வரம் மெட்டி ஒலி சீரியல்களின் இயக்குனர் திருமுருகன் இயக்கிய எம்டன் மகன் படத்தில் நாசர் மகனாக பரத் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனாலும் பரத் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பெற முடியாமல் 3ம் நிலை நடிகராகவே இருந்து வருகிறார். இன்னும் மாஸ் ஹிட் படங்களை அவரால் தர முடியவில்லை. அதுபோன்ற படங்கள் அவருக்கு அமையவில்லை.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் பரத்திடம், வில்லன் கேரக்டரில் நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் பரத் கூறியதாவது, கண்டிப்பாக வில்லனாக நடிப்பேன். ஆனால் அந்த நெகட்டிவ் கேரக்டர் மீது மொத்த கதையும் இருக்க வேண்டும். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் நடித்தது போல் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

அப்படி இருந்தால்தான் நம்முடைய முழு உழைப்பு திறமை ரசிகர்களுக்கு போய் சேரும். அதனால் ஏனோதானோ என்பது போன்ற வில்லன் கேரக்டரில் நிச்சயமாக நடிக்க மாட்டேன். நெகடிவ் ரோல்களில் நடிக்கும் போது ஹீரோவை காட்டிலும் இன்னும் திறமையான நடிப்பை வெளிப்படுத்த முடியும். வித்யாசமாக நடிக்க முடியும் என்று விஜய் சேதுபதி கூட ஒருமுறை சொல்லி இருந்தார். அதனால் வில்லனாக கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று பரத் கூறியிருக்கிறார்.

சற்று முன்