- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்பவும் அதை நினைச்சுக்கிட்டே இருக்கணும், அப்போ நல்லவிதமா வாழ்ந்திடலாம் - இசைப்புயல் ஏஆர் ரகுமான் சொன்ன...

எப்பவும் அதை நினைச்சுக்கிட்டே இருக்கணும், அப்போ நல்லவிதமா வாழ்ந்திடலாம் – இசைப்புயல் ஏஆர் ரகுமான் சொன்ன அந்த விஷயம்!

- Advertisement -

வாழ்க்கையில் மிகப்பெரிய புகழில் உச்சம் தொட்ட சில மனிதர்கள் எப்போதுமே மக்களால் அதிக கவனம் பெறுகின்றனர். அதற்கு காரணம் அவர்களது உயரம் எப்படி சாத்தியமானது என்கிற ஆர்வமும் எதிர்பார்ப்பும்தான். ஆனால் உயர்ந்த நிலைக்கு வந்த அனைவருமே உயர்ந்த மனநிலையில் இருப்பதில்லை.

அப்படி இருப்பது போல் சிலர் வெளியில் காட்டிக் கொண்டாலும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களால் மட்டுமே அவர்களது உண்மையான முகம் தெரியும். அவர்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள் புரியும். அவர்கள் மக்கள் மத்தியில் பெரிய நடிகர்களாக நடித்து ஏமாற்றிக் கொண்டிருப்பதும் தெரியும்.

- Advertisement -

ஆனால் சில மனிதர்கள் நிஜத்தில் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையில் இருக்கிறார்கள். அவர்களிடம் எந்தவிதமான குற்றங்களும் தவறுகளும் இருப்பதில்லை. வாழ்க்கை போராட்டத்தில் அவர்கள் படும் கஷ்டங்களும் துன்பங்களும் அவர்களுக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்களும் எந்த நிலையிலும் அவர் சிறந்த மனிதர்களாகவே காணப்படுகின்றனர்.

இசைப்புயல் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானை கூட அவருடன் பழகியவர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் அப்படிதான் அவரை சிறந்த மனிதராக கொண்டாடுகின்றனர். தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஏஆர் ரகுமான் தொடர்ந்து இசைத்துறையில் பிஸியான மனிதராக இருந்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் அவரது மனைவி சாயிரா பானு, ஏஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிறகு உடல் நல பாதிப்பால் அவருடன் இணைந்திருக்க முடியவில்லை என்றும் விளக்கமளித்தார். அப்போது சில வதந்திகளும் வேகமாக ஏஆர் ரகுமான் மீது பரவி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் கூறியதாவது, மரணம் குறித்து எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி நினைக்கும்போது தானாகவே ஒரு அடக்கம் மனசுக்குள் வந்துடும். எவ்வளவு குதிச்சாலும் கடைசியில் சாகத்தானே போறோம். அப்புறம் எதுக்கு அதுக்குள்ள குதிக்கணும். அதுதான் வரப்போகுது. அதுவரைக்கும் நம்ம இருப்பை நல்லவிதமா பயன்படுத்திக்கலாம். நல்ல விஷயங்களை ஷேர் பண்ணிக்கலாம். நல்லபடியாக வாழ்ந்துக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்