- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தி டைட்டில் யாருக்கு சொந்தம்? விளக்கம் அளித்த நடிகர் விஜய் ஆண்டனி - அறிக்கை வெளியிட்டு...

பராசக்தி டைட்டில் யாருக்கு சொந்தம்? விளக்கம் அளித்த நடிகர் விஜய் ஆண்டனி – அறிக்கை வெளியிட்டு உறுதி செய்த ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

கடந்த 73 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1952ம் ஆண்டில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கருணாநிதி கதை வசனத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமான படம் பராசக்தி. இன்று வரை அந்த படத்தில் கோர்ட் காட்சியில் சிவாஜி கணேசன் பேசிய வசனம், டிரண்டிங்கில் இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக பராசக்தி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்துக்கு பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிவாஜி கணேசன் குடும்பத்தினர், ஏவிஎம் நிறுவனம், கருணாநிதி குடும்பத்தினரிடம் முறைப்படி அனுமதி வாங்கியதாக கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் நேற்று தனது 25வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் விஜய் ஆண்டனி, தனது படத்துக்கு சக்தி திருமகன் என்றும் தெலுங்கில் வெளியாகும் அதே படத்துக்கு பராசக்தி என்றும் டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இது தமிழ் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் ஜூலை 22ம் தேதி, திரைப்பட வர்த்தக சபையில் இந்த டைட்டிலை பதிவு செய்தததற்கான ஆதாரத்தை வெளியிட்டார். அதனால் 6 மாதங்களுக்கு முன்பே இந்த டைட்டிலை தனது படத்துக்கு வைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

இதையடுத்து இப்போது பராசக்தி படத்தை 73 ஆண்டுகளுக்கு முன் தயாரித்த ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 படத்துக்கு, 73 ஆண்டுகளுக்கு முன் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்தின் டைட்டிலை பயன்படுத்திக் கொள்ள தங்களது நிறுவனம் அனுமதி தந்திருப்பதை உறுதி செய்திருக்கிறது.

தமிழில் வெளியாகும் தனது படத்துக்கு சக்தி திருமகன் என்ற டைட்டிலும், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகும் தனது படத்துக்கு பராசக்தி என்றும் டைட்டில் வைத்து விஜய் ஆண்டனி குழப்பம் செய்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படமும் பிற மொழிகளில் பராசக்தி என்ற டைட்டிலில்தான் வெளியாகும் என்பதால், விஜய் ஆண்டனி தனது டைட்டிலை மாற்றிக் கொள்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சற்று முன்