- Advertisement -
புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் வித் லவ் என்ற படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து பிக்காசோ என்ற படத்திலும் அவர் நடித்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் ஆதரவும் அவருக்கு உள்ள நிலையில் மேலும் 4 படங்களில் கதாநாயகனாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வளரும் நம்பிக்கைக்குரிய இளம் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த் உருவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





