- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் அரசியல்வாதி ஆக யார் காரணம் தெரியுமா? நான் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறேன் - விளாசித்...

நடிகர்கள் அரசியல்வாதி ஆக யார் காரணம் தெரியுமா? நான் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறேன் – விளாசித் தள்ளிய நடிகர் விஷால்!

- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜ ராஜா படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதையடுத்து நடிகர் விஷால் நேற்றிரவு சென்னையில் உள்ள அன்னை காளிகாம்பாள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், அரசியலுக்கு நடிகர்கள் வருவது குறித்து பகிரங்கமாக தனது கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது நடிகர் விஷால் கூறியதாவது, வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நான் அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பேன். அதுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு. ஆனால் நான் அரசியலுக்கு வரக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். அரசியல்வாதிகள் எல்லாம் நல்லது செய்தால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வருகிறோம்? நாங்க எங்க தொழிலை பார்த்துவிட்டு போவோம். அரசியல்வாதிகள் பண்ணலே என்பதை நாங்கள் கண்ணால பார்க்கிறோம்.

சுதந்திரம் வந்து 70 வருஷம் ஆயிருச்சு. ஆனா இன்னும் குடிநீர் வசதி இல்லாம தான் பல கிராமங்கள் இருக்கு. ஒரு போர்வெல் போடுவதற்கு 4 வாரமாக மின்சாரம் தருவதற்கு மின்சார வாரியம் யோசித்தார்கள். குடிநீருக்கு போர்வெல் போடுவதற்கு 4 வாரமாக அப்ரூவல் ஆகாமல் இருந்தது. அதற்கு பிறகு கடினமாக கேட்ட பின்பு அப்ரூவல் ஆனது.

அப்படி 235 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி செய்து தந்துள்ளோம். பக்கத்தில் உள்ள 4 கிராமங்களும் பயன்படுத்திக்கலாம். இன்னும் எத்தனையோ கிராமங்கள் சாலை வசதி மருத்துவ வசதி இல்லாமல் நிறைய விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் ரொம்ப தர்ம சங்கடமா இருக்கு. அதையெல்லாம் அரசியல்வாதிகள் நிறைவேற்றினால்நாங்க நடிகர்கள் நாங்க நடிக்கப் போயிடுவோம்.

அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறும்போது நடிகர்கள் எல்லாம் அரசியல்வாதியாக மாறுவதற்கு நீங்கள் தான் வழி கொடுத்து இருக்கீங்க. ஜிஎஸ்டி வரியில் சூதாட்டத்தையும் சினிமாவையும் ஒரே பிரிவில் போட்டு இருக்காங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. நாங்க ரெண்டு வரி கட்டுறோம். அதை குறைத்தால் நன்றாக இருக்கும்.

இனிமேல் எந்த பேட்டியாக இருந்தாலும் இப்படி கையை ஆட்டிகிட்டு தான் நடுங்கியபடிதான் பேசுவேன். இந்த நடுக்கத்தால் 4 நிமிஷத்தில் மொத்த உலகத்தில் எத்தனை பேர் எனக்காக பிரச்சனை செய்தார்கள், நேசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். நன்றி என்று நடிகர் விஷால் அப்போது பேசியிருக்கிறார்.

சற்று முன்