- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா 45 படப்பிடிப்பில் டென்சன் ஆன இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, கேன்சல் செய்யப்பட்ட ஷூட்டிங் -...

சூர்யா 45 படப்பிடிப்பில் டென்சன் ஆன இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, கேன்சல் செய்யப்பட்ட ஷூட்டிங் – ஒரே நாளில் 25 லட்சம் ரூபாய் ஸ்வாகா ஆயிடுச்சே?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கங்குவா. இந்த படம் படுதோல்வி அடைந்த நிலையில் அடுத்து தனது 44வது படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே 1ம் தேதியன்று உழைப்பாளர் தினத்தின் திரைக்கு வர உள்ளது. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.

அந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இப்போது, நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா 3வது முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் லப்பர் பந்து நடிகை சுவாசிகா நெடுஞ்சாலை பட நாயகி ஷிவதா மற்றும் நட்டி யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் சூர்யாவும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியும் வக்கீல் கேரக்டர்களில் நடிக்கின்றனர். படத்தின் வில்லனும் ஆர்ஜே பாலாஜி தான் என்று சொல்லப்படுகிறது. ஜெய்பீம் எதற்கும் துணிந்தவன் படங்களுக்கு பிறகு 3வது முறையாக இந்த படத்தில் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடித்து வருகிறார்.

தற்போது சூர்யா 45 படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்துவரும் நிலையில் முன்னதாக கோவையில் உள்ள தமிழ்நாடு அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் ஒரு மாதத்துக்கு மேல் நடந்தது. இதில் சூர்யா சுவாசிகா திரிஷா ஷிவதா நட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது மக்கள் கூட்டமாக உள்ள காட்சிகள் பல நாட்கள் படமாக்கப்பட்டுள்ளன. அதில் 500 பேர் ஆர்ஜே பாலாஜி கேட்டால், 300 பேர் படப்பிடிப்பு தளத்தில் இருந்துள்ளார். 300 பேர் கேட்டால் 150 பேர் மட்டுமே இருந்துள்ளனர். இப்படி பலமுறை கேட்ட எண்ணிக்கையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்களை கொண்டு வந்து நிறுத்தாமல் தயாரிப்பு நிறுவனம் ஏமாற்றியுள்ளது.

இப்படியே பல நாட்கள் நடந்ததால், ஒரு கட்டத்தில் பயங்கர டென்சன் ஆகியிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. ஒரு நாள் 300 பேர் கூட்டம் கேட்ட நிலையில், 150 பேர் மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்துள்ளனர். அதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ஆர்ஜே பாலாஜி, அன்று ஷூட்டிங்கையே கேன்சல் செய்திருக்கிறார். அந்த ஒரு நாளில் மட்டும் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்