- Advertisement -
Homeபொழுதுபோக்குகவர்ச்சி காமெடி மசாலா காட்சிகள் அங்கே எடுபடலையா, தமிழில் ரூ. 50 கோடி வசூலித்த விஷால்...

கவர்ச்சி காமெடி மசாலா காட்சிகள் அங்கே எடுபடலையா, தமிழில் ரூ. 50 கோடி வசூலித்த விஷால் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா?

- Advertisement -

தெலுங்கு சினிமா என்றாலே மசாலா கதைகள்தான். அதுவும் கலர் கலர் ஆடைகளில் கதாநாயகிகளை குத்தாட்டம் போட வைத்து, வில்லன்களை தவிடுபொடி செய்யும் நம்ப முடியாத ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். லாரியை காலால் தடுத்து நிறுத்துவது, ரயிலை முந்திக்கொண்டு ஓடுவது, விமானத்தை கையால் எட்டிப் பிடிப்பது என சாகச சர்க்கஸ் காட்சிகளுக்கு தெலுங்கில் குறை இருக்காது.

தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்துவிட்டு, மார்க்கெட் இழந்த நடிகைகள் தெலுங்கு பக்கம் சென்றால், கவர்ச்சி நடிகைகளாக மாறி விடுகின்றனர். அப்படிதான் அட்டக்கத்தி நந்திதா ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்ருதிஹாசன் கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளை தெலுங்கு சினிமா கவர்ச்சி நாயகியாக மாற்றி காட்டியது.

- Advertisement -

அதே நேரத்தில் தெலுங்கில் சில படங்கள் வெளியாகி அபார வெற்றியை பெறுகின்றன. கடந்த தீபாவளிக்கு தெலுங்கில் வெளியான படம் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி இயக்கிய இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்தார். மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்திருந்தார். ராம்கி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். படம் அபார வெற்றியை பெற்றது.

நேரடி தெலுங்கில் வெளியான கேம் சேஞ்சர் படுதோல்வி அடைந்த நிலையில் வெங்கடேஷ் நடித்த சங்கராந்தி வஸ்துனம் படம் அபார வெற்றி பெற்று ரூ. 300 கோடி வசூலித்திருக்கிறது. அதே போல் தமிழில் வெளியாகி பெரிய வரவேற்பை ரூ. 50 கோடி வசூலை கடந்த படம் மதகஜ ராஜா. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த படம் தெலுங்கில் கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்டது.

- Advertisement -

வழக்கமான தமிழில் பெரிய வெற்றியை வரவேற்பை பெறும் படங்கள் உடனடியாக தெலுங்கு மொழியிலும் வெளியாகும். அங்கும் அந்த படங்கள் பலத்த வரவேற்பை பெறும். குறிப்பாக விஷாலுக்கு தெலுங்கில் ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது மார்க் ஆண்டனி துப்பறிவாளன் போன்ற படங்களுக்கு தெலுங்கில் பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்தது.

அந்த ஆர்வத்தில் தெலுங்கில் வெளியிடப்பட்ட மதகஜ ராஜா படத்துக்கு அங்கு ரசிகர்கள் மத்தியில் எந்த ரெஸ்பான்ஸ்சும் இல்லை. கவர்ச்சி காமெடியை நம்பி படம் எடுத்து ஜெயிக்கும் சுந்தர் சி படத்தை தெலுங்கு ரசிகர்கள் கண்டுகொள்ளவே இல்லை. வெறும் கவர்ச்சி காமெடி ஆக்சன் மசாலா நிறைந்த தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய மதகஜ ராஜா படத்தை புறக்கணித்த தெலுங்கு ரசிகர்கள், லக்கி பாஸ்கர் போன்ற நல்ல கதையம்ச படங்களை வரவேற்பது அவர்களது மெச்சூரிட்டியை வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

சற்று முன்