- Advertisement -
Homeபொழுதுபோக்குதிமுக அரசுக்கு எதிராக மீண்டும் குரல் எழுப்பிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் -...

திமுக அரசுக்கு எதிராக மீண்டும் குரல் எழுப்பிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் – அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என ஆவேசம்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், தொடர்ந்து திமுக அரசுக்கு எதிரான தனது எதிர்ப்பு கருத்துகளை பகிரங்கமாக தெரிவித்து வருகிறார். சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த அறிக்கை ஒன்றை நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருக்கும் கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை;சுதந்திர இந்தியாவில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் இந்தியா முழுமையும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

- Advertisement -

இந்த விவகாரத்தில் மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழி இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா மாநில அரசுகள் ஏற்கனவே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வினை நடத்தி முடித்து புள்ளி விவரங்களை கையில் வைத்துள்ளன. மேலும் தற்போது தெலுங்கானா மாநில அரசும் 50 நாட்களில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து இருக்கிறது.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றனர் என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால் சமூக நீதி நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்க மற்ற மாநிலங்களை பின்பற்ற தமிழக அரசு தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை. இப்படி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள்.

- Advertisement -

பெரியாரே எங்கள் தலைவர், தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் என்று சூழலுக்கு ஏற்றவாறு அவர் தங்களின் சுயலாபத்துக்காக மட்டுமே அவரைப் பற்றி பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியை காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். சாதி வாரி கணக்கெடுப்பை தான் மத்திய அரசு நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன்னோட்டமாக திகழும் கேசட் சர்வே என்ற ஆய்வை மாநில அரசே நடத்தலாமே.

இதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்ல போகிறார்களா, அப்படி எனில் தெலுங்கானா மாநில அரசுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வகையான உண்மையான சமநீதி சமத்துவ நீதி சமூக நீதியை வழங்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாகவே கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நடிகர் விஜய் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்