- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நயன்தாராவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்… இதுதான் காரணமா? ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

நடிகை நயன்தாராவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்… இதுதான் காரணமா? ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. 2005ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான அவர் இப்போது 20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி மலையாளம் என பல மொழிகளிலும் நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இதுவரை மொத்தம் 75 படங்களுக்கு மேல் நயன்தாரா நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான தெலுங்கு படம் மன சங்கர வரபிரசாத் காரு. நடிகர் சிரஞ்சீவியுடன் இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார்.

- Advertisement -

அனில்ரவி புடி இயக்கத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக வசூலை குவித்தது. இப்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அதே வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி நாயகியாக மாறிய நயன்தாரா மீது பல ஆண்டுகளாக பலவிதமான சர்ச்சைகள் விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பல கண்டிஷன்களை போட்டு இயக்குனர் தயாரிப்பாளரை திணற வைப்பவர் நயன்தாரா என்ற விமர்சனம் உள்ளது. சம்பளம், ஷூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடி, நடிக்கும் காட்சிகளில் இந்த மாதிரி நடிக்க மாட்டேன் என நயன்தாரா போடும் கண்டிஷன்களால் அவரது படங்கள் ஷூட்டிங் கடுமையாக பிரச்னைகளை சந்திக்கும் என்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டதும் உண்டு.

- Advertisement -

ஆனால் தற்போது நடிகை நயன்தாராவிடம் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை நடித்து முடித்துள்ள அவர் ஹாய் மற்றும் மண்ணாங்கட்டி ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே கமிட் ஆன படங்கள்தான் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களின் ஷூட்டிங்குக்கு இதுவரை சரியாக போகாமல் சாக்கு போக்கு சொல்லி இழுத்தடித்து வந்த நயன்தாரா, இப்போது படங்களில் நடிக்க தாமாக முன்வந்துள்ளார். அந்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சமீபத்தில் அழைத்து பேசியுள்ளார். அவர் நடிக்க வேண்டிய படங்களுக்கு கால்ஷீட் தேதிகளை பிரித்து தந்து பெண்டிங் உள்ள ஷூட்டிங்குகளை முடித்து தர சம்மதித்துள்ளார். தமிழ் சினிமாவில் புதுமுக இளம் நடிகைகளின் வருகை அதிகரித்தது தான் நயன்தாரவின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்