- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராகன் படம் கிளைமாக்ஸில் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம் யார்? - அட இப்பவே...

டிராகன் படம் கிளைமாக்ஸில் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம் யார்? – அட இப்பவே சொல்லுங்கப்பா… சஸ்பென்ஸ்சில் தவிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி காஜல் அகர்வால் கேஎஸ் ரவிக்குமார் வினோதினி வைத்தியநாதன் யோகிபாபு ஆர்ஜே ஆனந்தி பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் கேமியோ ரோலில் ஆட்டோ டிரைவராக கிளைமாக்ஸில் பிரதீப் ரங்கநானும் நடித்திருந்தார்.

தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த படம் லவ் டுடே. இந்த படத்தில் இவானா நாயகியாக நடித்திருந்தார். சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இன்றைய இளம் காதலர்களுக்கு மத்தியில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி, மொபைல் போனை கதை கருவாக்கி எடுத்த இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

இதையடுத்து ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள படம் டிராகன். இந்த படம் வருகிற 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. நாளை 14ம் தேதி காதலர் தினத்தன்று டிராகன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அஜீத்குமாரின் விடாமுயற்சி படம் காரணமாக 2 வாரங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

டிராகன் படத்தில் டிரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஆர்வத்தை பெற்றிருக்கிறது. கல்லூரி மாணவராக அடாவடியான ஒரு கேரக்டரில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் மிஸ்கின் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். நிச்சயமாக படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

டிராகன் படம் பிரமோவுக்காக தொடர்ந்து பல நேர்காணல்களில் பங்கேற்று வரும் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தின் கிளைமாக்ஸில் பிரபலம் ஒருவர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறி வருகிறார். ஆனால் அவர் யார் என்பதை சொல்லவில்லை. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய சஸ்பென்ஸை ஏற்படுத்தி உள்ளது. யார் அந்த சார் என்பது போல, யார் அந்த பிரபலம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். அதனால் விக்கி மூலமாக நயன்தாராவை இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைத்திருப்பார்களா, அல்லது அஸ்வத் மாரிமுத்து சிம்பு படத்தை அடுத்து இயக்க உள்ளதால், சிம்பு கேமியோ ரோலில் வருகிறாரா, அல்லது சிம்பு நயன்தாரா தவிர்த்து வேறு ஒரு பிரபலமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் யாருய்யா அந்த பிரபலம் இப்பவே சொல்லுங்க என்று புலம்புகின்றனர்.

சற்று முன்