- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களுக்கு சொந்தமான பங்களாக்கள் எத்தனை? - கோர்ட்டில் ஒரு மணி நேரம் இசைஞானி இளையராஜாவிடம் விசாரணை!

உங்களுக்கு சொந்தமான பங்களாக்கள் எத்தனை? – கோர்ட்டில் ஒரு மணி நேரம் இசைஞானி இளையராஜாவிடம் விசாரணை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை இசை சக்ரவர்த்தியாக தமிழ் சினிமாவில் ரசிகர்களை வசப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார். 1300 படங்களுக்கு மேல் இசையமைத்த அவர், பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை தந்திருக்கிறார்.

இளையராஜா இதுவரை தனது சொந்த குரலில் 1000க்கும் மேற்பட்ட பாடல்களை அவரே பாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி அவரே சொந்தமாக 7000 பாடல்களை எழுதியும் இருக்கிறார். சமீபத்தில் விடுதலை 2 படத்தில் இளையராஜாவே எழுதி இசையமைத்து அவரே பாடிய தெனம் தெனமும் உன் நினைப்பு என்ற பாடல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 2010ம் ஆண்டில் தங்களது உரிமம் பெற்ற பாடல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று மியூசிக் மாஸ்டர் என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தேவர்மகன் குணா உள்ளிட்ட 109 படங்களை உரிமையை தாங்கள் பெற்றுள்ளதாகவும் இளையராஜா மனைவி பெயரில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த பாடல்களை சமூக வலைதளங்களில் இளையராஜா வெளியிட்டு வருவதால் அதை தடை செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா சாட்சியம் அளிப்பதற்காக பாடல்கள் உரிமம் குறித்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டில் இசைஞானி இளையராஜா நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

- Advertisement -

அதில் உங்களுக்கு சொந்தமாக எத்தனை பங்களாக்கள் உள்ளன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இளையராஜா, எனக்கு எத்தனை பங்களாக்கள் உள்ளது என எனக்கு தெரியாது. சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டுடியோவும் கிடையாது. என்னுடைய முழு ஈடுபாடும் இசையில் மட்டுமே உள்ளதால் உலகளாவிய பொருட்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பெயர் புகழ் செல்வம் என எல்லாமே சினிமா மூலம் தான் எனக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த 1990களில் பாடல்கள் குறித்த ஒப்பந்தம் மேற்கொண்ட போது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் இளையராஜா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இளையராஜா, தனது இசையில் உருவான பாடல்களை யாரும் அவர்களது புதிய படங்களில் தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என்று எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்