அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் அர்ஜுன் ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதனை பூர்த்தி செய்ய தவறியது. அஜித் ரசிகர்களிடத்திலும் விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
கடந்த வாரம் வியாழன் கிழமை வெளியான இந்த திரைப்படம், முதல் நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு வார நாட்களில், விடாமுயற்சி திரைப்படத்தின் வசூல் பெரிய அளவில் ஏறவில்லை. படத்திற்கு பெரிய அளவில் ரீச் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்ததாக வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தில் அஜித் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் அஜித்தின் லுக் ரசிகர்கள் மத்தியில் பிடித்துப் போனதால், பலரும் இதனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பாடல்களுக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க பின்னணி இசையை மெருகூட்டி இருக்கிறார் ஜிவி பிரகாஷ். வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது.
இதன் பிறகு அஜித்குமார் நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி தான் தற்போது எழுந்து வருகிறது. இந்தப் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். கிட்டத்தட்ட அவர் இயக்கப் போவது உறுதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள். சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, அஜித் படத்தை தான் இயக்க இருப்பதாகவும் ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இருப்பினும் இந்த பட்டியலில் இன்னும் சிறுத்தை சிவா மற்றும் வெங்கட் பிரபு நீடிப்பதாக தெரிகிறது. தற்போது, இந்த ரேஸில் புதிதாக இரண்டு இயக்குனர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். மகாராஜா திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன், அஜித்திடம் வெறும் ஒரு இரண்டு லைனை கூற, அதுவே ஏ கே வுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இதனால் அவர் கூட அடுத்த திரைப்படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இதுபோக போர்த் தொழில் படத்தை எடுத்து, பலரது கவனத்தை ஈர்த்த விக்னேஷ் பிரபுவும் அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான பட்டியலில் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





