- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவரே நீங்களே ஓரவஞ்சனை செய்யலாமா, பாரபட்சம் காட்டலாமா, ரஜினியை நோக்கி பாயும் விமர்சன அம்புகள் -...

தலைவரே நீங்களே ஓரவஞ்சனை செய்யலாமா, பாரபட்சம் காட்டலாமா, ரஜினியை நோக்கி பாயும் விமர்சன அம்புகள் – தலைவரு அப்படி என்னய்யா தப்பு பண்ணினாரு?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளமாக இருப்பவர். ரஜினி, கமல் பெயரை சொல்லாமல் தமிழ் சினிமா வரலாறை சொல்ல முடியாது. 72 வயதிலும் இப்போதும், ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார். அவரது ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ரூ. 525 கோடி வசூல் சாதனை புரிந்தது.

இப்போது ரஜினி 170 படத்தில், தசெ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது சமூகத்தில் உள்ள குறைகளை, குறிப்பாக கொத்தடிமைகள் மீட்பு குறித்த கதை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரஜினி 171 லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், அதையடுத்து, ஜெயிலர் 2 படத்திலும் ரஜினி நடிக்க திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் போன்ற டாப் ஸ்டார் வரிசையில் இருக்கிற நடிகர்கள், இப்போதெல்லாம் பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடிக்கின்றனர். அதாவது படத்தின் முதலீடு சில நூறு கோடிகளாகவும், வசூல், ஆயிரம் கோடிகளை கடந்திருக்கவும் இலக்கு நிர்ணயித்து விடுகின்றனர்.

இந்த பிரமாண்ட படங்கள் பெரும்பாலும் ஆக்சன் படங்களாக, துவக்கம் முதல் இறுதி வரை சண்டையை மட்டுமே மையப்படுத்தி இருக்கின்றன. இதில் கேமியோ, எல்சியு, பார்ட் 1, பார்ட் 2 என புதிய யுக்திகளை கொண்டுவந்து, ரசிகர்களை முட்டாளாக்குகின்றனர். தவிர, இதில் பல படங்கள் ஹாலிவுட் படங்களின் அப்பட்டமான காப்பியாக தான் இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில், தீபாவளி ரிலீஸ் படமாக வந்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம், உண்மையில் மிகச்சிறந்த படமாக இருக்கிறது. பார்த்த ரசிகர்கள் அனைவருமே பாராட்டும் வகையில், உண்மை கதையாக மிக சிறப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். ரஜினிகாந்த் கடிதம் மூலமும், நேரில் சென்ற படக்குழுவினரையும் பாராட்டி இருக்கிறார்.

ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் இப்படி பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்கள் நடித்த படங்களை பாராட்டுவது போல, நல்ல கதை அம்சம் உள்ள காக்கா முட்டை, குட்நைட், சித்தா, தீபாவளிக்கு வந்த கிடா போன்ற சின்ன பட்ஜெட் படங்களை இப்படி முன்வந்து பாராட்டலாமே, இதில் பாரபட்சம் காட்டலாமா, இப்படி ரஜினிகாந்த் பாராட்டிய படம் என்றால், தியேட்டரில் சின்ன பட்ஜெட் படங்களை காண ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்குமே என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்