சிம்பு வரலட்சுமி சரத்குமார் நடித்த போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் தானா சேர்ந்த கூட்டம் காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கிய அவர் இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் லைக் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்துக்கு முதலில் எல்ஐசி என டைட்டில் வைக்கப்பட்டு இப்போது லைக் என மாற்றப்பட்டுள்ளது.
நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய போது அதில் நாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டு, 7 ஆண்டுகள் காதலித்த பின் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டனர். ஆரம்பத்தில் நடிகர் சிம்பு பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா பிறகு இருவரையும் பிரேக்கப் செய்துவிட்டார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இசை வௌியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்துக்கொண்டு பேசியதாவது, டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை எனக்கு குறும்படங்கள் எடுத்த காலகட்டத்தில் இருந்தே தெரியும்.
பிரதீப் ரங்கநாதன் இப்போது எனது இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இசையமைப்பாளர் லியோன் இதற்கு முன்பு நான் எழுதிய பாடல் வரிகளை எனக்கே தெரியாமல் மாற்றிவிட்டார். திமிரு காட்டாதடி பாடலை நான் எழுதும் போது முதலில் பிலிம் காட்டாதடி என்றுதான் எழுதினேன். ஆனால் லியோன் அதனை திமிரு காட்டாதடி என பாடலை மாற்றி உருவாக்கி விட்டார்.
ஆனால் டிராகன் படத்தில் நான் எழுதிய பாடலை திருத்தம் எதுவும் செய்யாமல் உருவாக்கியுள்ளார். போடா போடி படத்தில் மாட்டிக்கிட்டேன் என ஒரு பாட்டு வரும். அந்த பாடலை எங்களால் சுமார் 1.5 ஆண்டுகளுக்கு மேலாக எடுக்க முடியவில்லை. இப்படி இருக்கும்போது சிம்பு சார் என்னை கூப்பிட்டு டேய் விக்கி நீ பாட்டெல்லாம் நல்லாத்தான் எழுதறே. ஆனா அதுல மாட்டிக்கிட்டேன்னு ஒரு வார்த்தையை எழுதி இப்ப பாரு 1.5 வருடங்களா பாடலை எடுக்க முடியவில்லை என்று கூறினார்.
அதில் இருந்து எந்த பாடல் எழுதினாலும் கவனமாக நான் எழுதுவேன். நான் பாடல் எழுத தொடங்கிய போது சிம்பு தான் நீ நல்லா எழுதுறே, நீயே பாட்டு எழுது என்று என்னை ஊக்குவித்தார். ஆரம்பம் படத்தில் எல்லாமே இனிமேல் நல்லாத்தான் நடக்கும் என்று எழுதிய பின்னல் தான் எனக்கு படம் கமிட் ஆனது. நடிகர் சிம்புவால் தான் என் வாழ்க்கையே மாறியது என்று விக்னேஷ் சிவன் அந்த விழாவில் பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





