நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக இருந்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இப்போது விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.
கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் இருந்து கார் ரேஸ்களில் கலந்துக்கொண்டுள்ள நடிகர் அஜீத்குமார் துபாய் போர்ச்சுக்கல் தொடர்ந்து இப்போது ஸ்பெயின் நாட்டில் வெனிஸ்லயா நகரில் நடந்து வரும் கார் ரேஸில் கலந்துக் கொண்டுள்ளார். நேற்று முன்தினம் கார் ரேஸில் ஏற்பட்ட விபத்தில் அஜீத்குமார் ஓட்டிச் சென்ற கார் 3 முறை பல்டியடித்து, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் இதுவரை 3 முறை கார் ரேஸ் பந்தயத்தில் விபத்தில் சிக்கிய அஜீத்குமார், எவ்வித காயங்களும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார். வெனிஸ்லயா நகரில் நடந்த விபத்திலும் எந்த சிறு காயமும் இல்லாமல் அவர் நலமாக இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது. எனினும் இப்படி உயிரை பணயம் வைத்து கார் ரேஸ் அவசியமா என ஏகே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் அஜீத்குமாருக்கு ஆசை நாயகன் அல்டிமேட் ஸ்டார் ஆகிய பட்டப் பெயர்கள் உண்டு. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீனா என்ற படத்தில் அஜீத்குமார் நாயகனாக நடித்தார். அந்த படம் வெளியான பிறகு அஜீத்குமாருக்கு தல என்ற பெயரும் ஏற்பட்டது. அவரது ரசிகர்கள் ஏகேவை தல என்றே அழைத்தனர்.
கிரிக்கெட் தோனிக்கு தல என்ற பெயர் வருவதற்கு முன்பே, சினிமாவில் தல என அழைக்கப்பட்டவர் நடிகர் அஜீத்குமார்தான். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜீத்குமார் என்னை ஆசை நாயகன் அல்டி மேட் ஸ்டார் தல என்று யாரும் அழைக்காதீர்கள். அஜீத்குமார் அல்லது ஏகே என்று மட்டும் அழைத்தால் போதும், பட்டப் பெயர்கள் எதுவும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார்.
எனினும் இன்னும் அஜீத் ரசிகர்கள் அவரை தல என்று அழைப்பதை சொல்வதை மறக்கவில்லை. இதுகுறித்து பிரபல வில்லன் மற்றும் காமெடி குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் மகாநதி ஷங்கர் கூறுகையில், முதன் முறையாக தீனா படப்பிடிப்பில் நான்தான் அஜீத்குமாரை தல என்று கூப்பிட்டேன். துணிவு படம் ஷூட்டிங்குக்கு நான் போன போது, அவர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு 10 நிமிடங்கள் விடவே இல்லை. அங்கு இருந்த கேமரா மேனிடம் இவர்தான் என்னை முதல் முறையாக தல என்று கூப்பிட்டவர் என்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தார், என்று மகாநதி ஷங்கர் கூறியிருக்கிறார்.





