- Advertisement -
Homeபொழுதுபோக்குபல ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் ரீ என்ட்ரி தரும் விஜய் பட நடிகை, இந்த முறை...

பல ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் ரீ என்ட்ரி தரும் விஜய் பட நடிகை, இந்த முறை இவருக்கு ஜோடியா? – இந்த ஒற்றுமையை ரசிகர்கள் எதிர்பார்க்கலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்று நடிகர் விஜய் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 69வது படமாகும். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம்தான் விஜயின் கடைசி படம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படம் மூலம் 1992ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து செந்தூரப்பாண்டி ரசிகன் தேவா போன்ற படங்களில் நடித்த விஜய், அடுத்ததாக இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் நடித்த பிறகுதான் விஜய்க்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த படத்துக்கு பிறகுதான் விஜய்க்கு தமிழ் சினிமாவில் வசந்த காலமே பிறந்தது. அவரது சினிமா வாழ்க்கையின் முன்னேற்றமே ஆரம்பமானது என்றால் அது மிகையல்ல.

பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சங்கீதா நடித்திருந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் நடித்த போது அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த நடிகை சங்கீதா, பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். ஏற்கனவே அவர் சீதனம் பொங்கலோ பொங்கல் காலம் மாறிப் போச்சு வள்ளல் கங்கா கௌரி அம்மன் கோவில் வாசலிலே அலெக்ஸாண்டர் எல்லாமே என் ராசா தான் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பல 1980 90 நடிகைகள் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து வரும் நிலையில் இப்போது பூவே உனக்காக நடிகை சங்கீதாவும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். சின்ன தளபதி என அழைக்கப்படும் நடிகர் பரத் நடிக்கும் காளிதாஸ் 2 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தளபதி விஜய்க்கு ஜோடியாக அன்று பூவே உனக்காக படத்தில் நடித்த சங்கீதா, மீண்டும் சின்ன தளபதி பரத் படத்தில் ரீ என்ட்ரி தருவது நல்ல ஒற்றுமை என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

சற்று முன்