- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் திரைப்படத்திற்கு காத்திருக்கும் ஆப்பு, இந்த முறை நெல்சன் என்ன ஆகப்போறாரோ?

ஜெயிலர் திரைப்படத்திற்கு காத்திருக்கும் ஆப்பு, இந்த முறை நெல்சன் என்ன ஆகப்போறாரோ?

- Advertisement -

நெல்சன் இதற்கு முன்பு விஜய்யை வைத்து இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களே அதிகமாக வந்தது. குறிப்பாக இயக்குனர் நெல்சனை வைத்து பல மீம்கள் வலம் வந்தன. இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

இதனை தொடர்ந்து நெல்சன் தற்போது ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர்” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. சமீப காலமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும் நாளில் அதிகாலை ஸ்பெஷல் ஷோ போடுவது வழக்கமா இருந்து வந்தது. ஆனால் ஸ்பெஷல் ஷோவை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டார்கள்.

இந்த காரணத்தால் “ஜெயிலர்” திரைப்படத்திற்கும் ஸ்பெஷல் ஷோ இல்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்திற்கு ஒரு ஆப்பு ஒன்று தயாராக இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் ஸ்பெஷல் ஷோ இல்லை என்றாலும் கர்நாடகாவில் “ஜெயிலர்” திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 6 மணிக்கு திரையிட உள்ளார்கள் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டினர் “ஜெயிலர்” திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்னமே கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பார்த்துவிடுவார்கள். ஆதலால் தமிழ்நாட்டு திரையரங்குகளில் காலை  காட்சி திரையிடப்படுவதற்கு முன்னமே விமர்சனங்கள் வெளிவந்துவிடும்.

படம் ஒரு வேளை நன்றாக அமைந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் படத்தில் எங்காவது சொதப்பிவிட்டால் முடிந்தது கதை. நெகட்டிவ் விமர்சனங்களால் தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆர்வத்தையும் அவர்கள் கெடுத்துவிடுவார்கள், இதனால் “ஜெயிலர்” படத்தின் வெற்றிக்கு சிக்கல் எழுந்துவிடும் என்று பத்திரிக்கையாளர் அந்தணன் தனது சமீபத்திய வீடியோ ஒன்றில் கவலையோடு தெரிவித்துள்ளார்.

சற்று முன்