- Advertisement -
Homeபொழுதுபோக்குவாடிவாசல் படம் ஸ்டார்ட் ஆகணும்னா வெற்றிமாறன் இதை செஞ்சே ஆகணும்... இப்படி ஒரு கண்டிஷன் போட்டாரா...

வாடிவாசல் படம் ஸ்டார்ட் ஆகணும்னா வெற்றிமாறன் இதை செஞ்சே ஆகணும்… இப்படி ஒரு கண்டிஷன் போட்டாரா சூர்யா… என்னங்க இது புது கதையா இருக்கு…

- Advertisement -

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதில் கார்த்திக் சுப்பராஜ் உடன் அவர் இணைந்து பணியாற்றி இருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கருணாகரன் ஜெயராம் உள்ளிட்டோரும் இதில் இடம்பெற்றுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர் பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக அதில் சூர்யா பேசும் வசனங்கள் அனைவரையும் கவர்ந்திருந்தது.

- Advertisement -

காதல் கலந்த கேங்ஸ்டர் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. ரெட்ரோவை தொடர்ந்து சூர்யா தற்போது தனது 45 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கும் இந்தத் திரைப்படம் ஃபேண்டஸி படமாக எடுக்கப்படுகிறது. அதிலும் சூர்யாவுக்கு இரண்டு கதாபாத்திரம் என்று கூறுகிறார்கள். ஒன்று வழக்கறிஞர் கதாபாத்திரம் இன்னொன்று அய்யனார் சுவாமி கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

படத்தில் திரிஷா கதாநாயகியாக வருகிறார். யோகி பாபு மலையாள நடிகர் இந்திரன் லப்பர் பந்து சுவாசிகா நட்டி உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வெற்றிமாறனும் தற்போது வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகளில் தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். சமீபத்தில் பேட்டி அளித்த இதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு, படத்திற்கான இசையமைக்கும் பணியை ஜீவி பிரகாஷ் தொடங்கி விட்டதாக கூறியிருந்தார். இப்படியான சூழலில் சூர்யா வெற்றிமாறனுக்கு ஒரு கண்டிஷனை போட்டு இருக்கிறாராம்.

அது வேறு ஒன்றும் இல்லை படத்திற்கான பவுண்டட் ஸ்கிரிப்ட் வேணும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஒரு திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே, அதன் காட்சி அமைப்பு வசனம் திரைக்கதை உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் உள்ளடக்கிய பிரதி தான் பவுண்டட் ஸ்கிரிப்ட். பலருக்கும் வேலையை சுலபமாக்கும் இதனை வெற்றிமாறன் செய்யவே மாட்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, வணங்கான் திரைப்படத்திலும் பாலா இதனை செய்ய மறுத்ததால் தான் சூர்யா படத்தில் இருந்து விலகியதாக கூறுகிறார்கள். தற்போது வெற்றிமாறனிடமும் சூர்யா பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்