- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா கையில் எந்த ஆயுதமும் இல்லே, ஆனா எல்லோரும் அவரை பார்த்தா நடுங்குவாங்க - இசைப்புயல்...

இளையராஜா கையில் எந்த ஆயுதமும் இல்லே, ஆனா எல்லோரும் அவரை பார்த்தா நடுங்குவாங்க – இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஓபன் டாக்!

- Advertisement -

இசைஞானி இளையராஜா கடந்த 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை தந்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பிற மொழிகளிலும் தனது இசையை தந்து பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு உயிர் தந்தவர்.

இளையராஜா போலவே, இசையில் தன்னிகரற்ற ஒரு புகழுடன் இருப்பவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். சிறுவனாக இருந்த போது இளையராஜா இசைக்குழுவில் கிடார் வாசித்தவர்தான் ஏஆர் ரகுமான். பிறகு மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படம் மூலம் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது வென்றவர்.

- Advertisement -

சமீபத்தில் இளையராஜா வேலியன்ட் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்து மாபெரும் சாதனை படைத்து சென்னைக்கு திரும்பியிருக்கிறார். அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா, அரசு விழாவாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திரைத்துறை சார்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து இளையராஜாவை பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இசைப்புயல் ஏஆர் ரகுமான் கூறியதாவது, ஒரு இசைக் கலைஞன் என்றால் தண்ணி அடிப்பான் பொண்ணுங்களோட சுத்திகிட்டு இருப்பான் அவனுக்கு சுத்தமா கேரக்டே இருக்காது என்று சில பேர் ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டாங்க.

- Advertisement -

அதனால் இசைக்கலைஞன் என்றாலே எல்லோரும் பயந்தாங்க. ஆனா இளையராஜா சார் அந்த பிம்பத்தை உடைத்து ஒரு சாமியார் மாதிரி இருப்பார். அவர் தண்ணி அடிக்க மாட்டார் தம் அடிக்க மாட்டார் வேற எந்த ஒரு கெட்ட பழக்கமும் அவர்கிட்ட கிடையாது. அவருக்கு இசை மேல் இருந்த அந்த மரியாதை என்னை ரொம்பவும் பாதித்தது.

அவர் கையில் எந்த ஒரு ஆயுதமும் இருக்காது. ஆனா அவரை பார்க்கிறவங்க எல்லாரும் நடுங்குவாங்க. அதற்கு காரணம் அவருடைய கேரக்டர் தான் என்று இசைப்புயல் ஏஆர் ரகுமான் இளையராஜா குறித்து விமர்சித்து பேசி இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளையராஜாவுக்கு போட்டியாக கருதப்படும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இப்படி பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பாராட்டைப் பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்