- Advertisement -
Homeபொழுதுபோக்குமதகஜராஜா கொடுத்த அமோக வெற்றியால் மடியில் இருந்த கனத்தை இறக்கி வைத்து விட்டாரா இயக்குனர் கௌதம்...

மதகஜராஜா கொடுத்த அமோக வெற்றியால் மடியில் இருந்த கனத்தை இறக்கி வைத்து விட்டாரா இயக்குனர் கௌதம் மேனன்… அவரே கூறிய தகவலால் ரசிகர்கள் ஆச்சரியம்…

- Advertisement -

நடப்பாண்டு தமிழ் சினிமாவுக்கு எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தியது தான் மதகஜராஜா திரைப்படத்தின் ரிலீஸ். பொங்கல் பண்டிகைக்கு அஜித்குமாரின் விடாமுயற்சி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சூழலில், அதனுடன் பாலாவின் வணங்கான் திரைப்படம் மட்டுமே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பிறகு ரேஸிலிருந்து திடீரென விடாமுயற்சி திரைப்படம் பின்வாங்க, புதிய திரைப்படங்கள் பலவும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் தான் எதிர்பாராத விதமாக வந்து விழுந்தது மதகஜராஜா. விஷால் மற்றும் இயக்குனர் சுந்தர் சி கூட்டணியில் 2013 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

பல்வேறு பொருளாதார சிக்கல் காரணமாக பெட்டிக்குள்ளேயே முடங்கி இருந்த இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு எட்டிப் பார்க்க, வசூலை வாரி குவித்தது. மிக முக்கியமாக படத்தில் சந்தானம் காமெடி சரவெடியாக இருப்பதாகவும், அதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பலம் என்றும் பலரும் கூறினார்கள்.

சொல்லப்போனால் பொங்கல் பண்டிகைக்கு சொல்லி அடித்த கில்லியாக மாறிய மதகஜராஜா, 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது நீண்ட நாட்களாக திரையரங்குகளில் வெளியாகாமல் முடங்கி கிடக்கும் படங்களை, மீண்டும் வெள்ளி திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் சில தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படமும் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் சூர்யாவிடம் சென்று பின்னர் அவர் நடிக்க மறுத்ததால் விக்ரம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் ஜான் எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்த நிலையில், இதன் டீசர் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பலமுறை திரைக்கு வருவதாக கூறிவிட்டு பின்னர் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக முடங்கி இருக்கும் இந்த திரைப்படம், கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று கௌதம் மேனன் கூறியிருக்கிறார். தற்போது துருவ நட்சத்திரத்தை ரிலீஸ் செய்ய பலரும் முனைப்பு காட்டி வருவதாகவும், எல்லாம் மதகஜராஜா செய்த உதவிதான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சற்று முன்