- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படம் இந்த படங்களில் இருந்து காப்பியடிச்சிருக்காங்க- இதோ ஆரம்பிச்சிட்டாங்களே

ஜெயிலர் படம் இந்த படங்களில் இருந்து காப்பியடிச்சிருக்காங்க- இதோ ஆரம்பிச்சிட்டாங்களே

- Advertisement -

ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான Showcase நேற்று வெளியானது. இதில் ரஜினிகாந்த் மிகவும் டெரிஃபிக்காக இருக்கிறார். ஒரு பக்காவான ஆக்சன் திரைப்படமாக “ஜெயிலர்” அமையும் என்று அந்த Showcase-ஐ பார்க்கும்போது தெரிய வருகிறது.

“ஜெயிலர்” திரைப்படத்தின் Synopsis சில நாட்களுக்கு முன்பே இணையத்தில் வெளியாகிவிட்டது. ரஜினிகாந்த் ஒரு ஓய்வு பெற்ற ஜெயிலர். தனது பேரனை வீட்டில் அன்போடு பார்த்துக்கொள்கிறார். அவரது மகன் ஒரு அசிஸ்டன்ட் கமிஷனர். ஒரு நேர்மையான அதிகாரி. ஆதலால் அவர் ஒரு கடத்தல் கும்பலின் பகையை சம்பாதித்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது மகன் தொலைந்துப்போக, அவரை தேடும் படலத்தில் ரஜினிகாந்த் தனது பழைய அணியுடன் சேர்ந்து பகைவர்களை துவம்சம் செய்கிறார். இதுதான் கதை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து நேற்று “ஜெயிலர்” திரைப்படத்தின் Showcase-ம் வெளிவந்தது. இதனை கொண்டு இத்திரைப்படம் அந்த திரைப்படத்தின் காப்பி, இந்த திரைப்படத்தின் காப்பி என்று சமூக வலைத்தளங்களில் பேசத்தொடங்கிவிட்டார்கள்.

ஒரு சிலர் “ஜெயிலர்” திரைப்படம் ஹிந்தியில் வெளியான “ஹம்” திரைப்படத்தின் காப்பி எனவும் அத்திரைப்படத்தின் கதையும் “ஜெயிலர்” படத்தின் கதையும் ஒத்துப்போகிறது எனவும் கூறி வருகின்றனர். அதே போல் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படத்தின் கதை போலவே “ஜெயிலர்” படத்தின் கதை இருப்பதாகவும் கூறி வருகின்றனர். “விக்ரம் மாதிரி ஒரு படத்தை எடுப்பார்கள் என்று பார்த்தால் விக்ரம் படத்தையே எடுத்து வைத்திருப்பார்கள் போல” என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேலி செய்யத்தொடங்கிவிட்டார்கள்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்