- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாரதிராஜா மகன் என்ற மன அழுத்தம்தான் நடிகர் மனோஜ் மறைவுக்கு காரணமா?-வெளிப்படையாக பேசிய...

இயக்குனர் பாரதிராஜா மகன் என்ற மன அழுத்தம்தான் நடிகர் மனோஜ் மறைவுக்கு காரணமா?-வெளிப்படையாக பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று கொண்டாடப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. கடந்த 50 ஆண்டுகால தமிழ் சினிமாவை பாரதிராஜா பெயர் சொல்லாமல் யாரும் கடந்துவிட முடியாது. புழுதிக்காடுகளில் செம்மண் பூமிகளில் வாழ்ந்த யதார்த்த மனிதர்களின் உண்மை வாழ்க்கையை கேமராவின் படம் பிடித்து திரையில் காட்டிய வித்தகர் பாரதிராஜா.

தாஜ்மகால் என்ற படம் மூலம் தன் மகன் மனோஜ்குமாரை அவர் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். நாயகனாக பல படங்களில் நடித்தும் மனோஜ் பெரிய வரவேற்பை பெறவில்லை. சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்தார். ரசிகர்களின் மனதில் நிற்கவில்லை. கடைசியில் மார்கழி திங்கள் ஒரு படத்தையும் இயக்கினார். இயக்குனராகவும் பெரிய வெற்றி இல்லை.

- Advertisement -

இந்த சூழலில் இருதய அறுவை சிகிச்சை அவருக்கு நடந்த நிலையில், ஓய்வில் இருந்த அவர் மறைந்தார். 48 வயதில் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாத்துறையும் கலங்கியது. துக்க நிகழ்வுக்கு வந்த நடிகர் தம்பி ராமையா போன்ற சிலர், பாரதிராஜா போல மனோஜ் சினிமாவில் பெயர் வாங்கலையே என்ற கேள்விதான் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உயிரை பறித்துவிட்டது என்று ஆதங்கப்பட்டனர்.

இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியிருப்பதாவது, துக்க நிகழ்வுக்கு வருபவர்கள் மைக் முன்பு நின்றவுடன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக் கூடாது. நான் மன உளைச்சலில் இருக்கிறேன் என இறப்பதற்கு முன் மனோஜ் உங்களிடம் சொன்னாரா, இப்படி வாய்க்கு வந்தபடி பேசுவது, குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும் அவர்களுக்கு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியாதா.

- Advertisement -

நான் மனோஜ் குமாரின் ஆபீஸூக்கு பலமுறை சென்றிருக்கிறேன். எப்போதும் ஜாலியாக சந்தோஷமாக சிரித்து பேசுவார். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பாரே தவிர எதை பற்றியும் வருத்தப்பட்டு அவர் வாடியதை நான் பார்த்தது இல்லை. அப்படி ஒரு மனிதர் மீது அபாண்டமான வீண் பழியை சுமத்துவது மாபெரும் தவறாகும்.

இயக்குனராக ஆசைப்பட்ட மனோஜ்குமாரை அவரது அப்பா பாரதிராஜா தான் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அவரது உடல்நலக்குறைவுக்கு காரணமே பாரதிராஜா தான் என்றெல்லாம் பேசுவது எல்லாம் முறையற்ற பேச்சு. எந்த வித மன உளைச்சலுக்கும் மனோஜ் ஆளாகவில்லை. உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் மறைந்தார். பிரபலமான ஒருவர் இறந்தார் என்றால் உடனே அவர் மீது வதந்தியை பரப்புவதும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு பேசுவதும் சரியல்ல என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்