- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு புத்தி சொல்லுங்க, நீங்க சொன்னா கேட்க வாய்ப்பிருக்கு - ரஜினியிடம் கோரிக்கை வைத்த எஸ்ஏ...

விஜய்க்கு புத்தி சொல்லுங்க, நீங்க சொன்னா கேட்க வாய்ப்பிருக்கு – ரஜினியிடம் கோரிக்கை வைத்த எஸ்ஏ சந்திரசேகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்து பெரிய பரபரப்பை பலமுறை ஏற்படுத்திய நடிகர் விஜய், கடந்த ஓராண்டாக தமிழக அரசியல் களத்திலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். ஆளுங்கட்சி திமுகவையும் மத்திய அரசு பாஜகவையும் நேரடியாக தாக்கிப் பேசி இணையத்தில் டிரண்டிங்கில் இருந்து வருகிறார்.

பாயாசம் பாசிசம் என திமுக பாஜக கட்சிகளை ஆரம்பத்தில் சூசகமாக தெரிவித்த விஜய், அதன்பிறகு எனக்கு அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் பகிரங்கமாக அறிவித்தார். நேற்று நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே என்றும் பிரைம் மினிஸ்டர் மோடிஜீ அவர்களே என்றும் கிண்டலாக பேசியிருக்கிறார்.

நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர். புரட்சி இயக்குனர் என்ற பட்டமும் இவருக்கு உண்டு. அப்போதே அவரது படங்களில் அரசியல் விமர்சனங்கள் அனல் பறக்கும். சட்டம் நீதித்துறை அரசியல் சார்ந்த தனது கருத்துகளை படத்தில் ஹீரோ பேசும் வசனங்களாக எழுதி பட்டைய கிளப்பியவர்தான் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விஜயின் தந்தை மற்றும் திரைப்பட இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, விஜய்க்கு சின்ன பையனாக இருக்கும்போதே சினிமாவில் நடிக்கும் ஆசையும் ஆர்வமும் அதிகமாக இருந்தது. படிப்பதை விட நடிப்பில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். என் வீட்டில் நடத்தப்படும் ஷூட்டிங்கை ஆர்வமாக வந்து பார்த்துக்கொண்டு இருப்பார். அப்போதே என்னிடம் நானும் சினிமாவில் நடிக்கிறேன் என்பார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நான் சிவப்பு மனிதன் என்ற படத்தை நான் டைரக்ட் செய்தேன். அப்போது என் வீட்டில் ஷூட்டிங் நடந்தது. ரஜினி ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது சிறுவனாக இருந்த விஜய் மேல் மாடியில் நின்றுக்கொண்டு ரஜினி நடிப்பதையே பார்த்துக்கொண்டு இருந்தார். படிப்பில் விஜய் கவனமின்றி இருந்தது எனக்கு கவலையாக இருந்தது.

அதனால் நடிகர் ரஜினியிடம், விஜயை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தேன். இவன் என்னுடைய பையன். படிப்பில் கவனம் இல்லாமல் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறான். இவனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லி அட்வைஸ் செய்யுங்கள். நீங்கள் சொன்னால் கேட்பான் என்று சொன்னேன். அப்போது ரஜினியும் விஜயிடம், இப்போது படிப்பில் கவனம் வையுங்கள். வளர்ந்து பெரியவன் ஆனதும் சினிமாவில் நடிக்கலாம் என்று அட்வைஸ் செய்தார் என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்