- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையத்தில் சுடச்சுட வெளியான சிக்கந்தர் - என்ன கொடும சார்...

தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையத்தில் சுடச்சுட வெளியான சிக்கந்தர் – என்ன கொடும சார் இது என புலம்பும் படக்குழுவினர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். இந்தியிலும் பல படங்களை இயக்கி இருக்கிறார். தமிழில் சூர்யா நடித்த கஜினி படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் அதே படத்தை இந்தியில் ரீ மேக் செய்து இந்தி நடிகர் அமீர்கானை வைத்து இயக்கினார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்போது ரூ. 200 கோடி பட்ஜெட்டில் நடிகர் சல்மான்கான் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த சிக்கந்தர் என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் உலகம் முழுவதும் இன்று ( 30ம் தேதி) ரிலீஸ் செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

படம் ரிலீஸை முன்னிட்டு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் படத்தின் ஹீரோ நடிகர் சல்மான்கான் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு தொடர்ந்து பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிக்கந்தர் படம் குறித்து பேசி வந்தனர். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று சிக்கந்தர் படம் ரிலீஸாக இருந்த நிலையில், நேற்று இரவு இந்த படத்தை பைரசி இணையதளங்களில் சிக்கந்தர் படம் சுடச்சுட ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது. வழக்கமாக படம் ரிலீஸான சில மணி நேரங்களில் அல்லது சில நாட்களில்தான் இப்படி பைரசி இணையதளங்களில் படங்கள் வெளியாகும்.

- Advertisement -

ஆனால் சிக்கந்தர் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்பே பைரசி இணையதளங்களில் வெளியாகி இருப்பது, யாரோ திட்டமிட்டு சதி செய்து விட்டதாக சிக்கந்தர் படக்குழுவினர் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர். ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை இப்படி பைரசி இணையதளங்களில் வெளியிட்டு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்தியில் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என எந்த மொழி படமாக இருந்தாலும் இப்படி பைரசி இணையதளங்களில் புதிய படங்களை இப்படி வெளியிடுவது சினிமா தொழில்துறையை கடுமையாக பாதிப்படைய செய்கிறது. பல மாதங்களாக பல நூறு கோடி ரூபாய் செலவழித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைத்து உருவாக்கிய ஒரு படத்தை அதற்கான அங்கீகாரத்தை அடையாளத்தை பெற விடாமல், அந்த படத்துக்கு சரியான லாபம் கிடைக்காமல் இப்படி பைரசி இணையதளங்களில் படத்தை வெளியிட்டு வருவது சினிமா துறையினரை கொதிப்படைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்