- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது இட்லியா, இட்லி உப்புமாவா? தனுஷ் படம் ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய தகவல் -...

அது இட்லியா, இட்லி உப்புமாவா? தனுஷ் படம் ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய தகவல் – விரக்தியில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை அவரே டைரக்ட் செய்த நிலையில் அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் உருவான படம் இட்லி கடை. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்திருக்கிறார். பாரதிராஜா சத்யராஜ் அருண்விஜய் ராஜ்கிரண் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் கடந்த வாரத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் நடிகர் தனுஷ் நடிகை நித்யாமேனன் நடிக்க வேண்டிய பாடல் காட்சி ஒன்று தாய்லாந்து நாட்டில் படம் பிடிக்கப்பட வேண்டும். இருவரது கால்ஷீட் பிரச்னை காரணமாக அந்த பாடல் காட்சி எடுத்த பிறகுதான் படம் ரிலீஸாகும். ஏப்ரல் 10ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாகாது என்று அறிவித்தார்.

- Advertisement -

இது தனுஷ் ரசிகர்களை பெரிய ஏமாற்றத்தில் தள்ளியது. கடந்த பிப்ரவரி 21ம் தேதி தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பலத்த தோல்வியை சந்தித்தது. ஆனால் அதே நாளில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படம் வசூலை வாரிக் குவித்தது. 25 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்தது.

வருகிற ஏப்ரல் 10ம் தேதி அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸாவதால், இட்லி கடை படத்துக்கும் அப்படி ஒரு பேராபத்து வந்துவிடக் கூடாது என்பதாலேயே இட்லி கடை படம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. பாடல் காட்சி, அஜீத் படம் ரிலீஸ் இரண்டுமே இட்லி கடை படம் ரிலீஸ் தள்ளி வைக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது இட்லி கடை படம் வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி ரிலீஸ் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 6 மாதங்களுக்கு பிறகு தான் இட்லி கடை படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. மே மாதம் ரெட்ரோ, ஜூன் மாதம் தக்லைப் ஜூலை மாதம் மதராஸி ஆகஸ்ட் மாதம் கூலி செப்டம்பர் மாதம் சூர்யா 45 என அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் லைன் அப்பில் இருப்பதால், 6 மாதங்களுக்கு பிறகுதான் இட்லி கடை ரிலீஸாகிறது.

சூரியவம்சம் படத்தில் ஒரு காட்சியில், தன்னை பார்க்க வரும் அப்பா ஜெய் கணேஷூக்கு ஆறிப்போன மீந்த இட்லிகளை உதிர்த்து போட்டு நடிகை தேவயானி இட்லி உப்புமா செய்து தருவார். அதுபோல் 6 மாதங்களுக்கு பின் ரிலீஸாகும் இட்லி கடையில் ரசிகர்களுக்கு கிடைக்கப் போவதும் இட்லி உப்புமா தான், ஊசிப் போன இட்லியை யார் சாப்பிடுவாங்க என்றும் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்