நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ஜனநாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரேமலு பட நடிகை மமிதா பைஜூ முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் பிரியாமணி ஸ்ருதிஹாசன் அபிராமி கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் நரேன் பாபி தியோல் உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீ மேக்தான் இந்த படம் என்ற தகவலும் இருந்து வருகிறது.
சில தினங்களுக்கு ஜனநாயகன் படம் குறித்து வெளியான ஒரு தகவலில் இந்த படத்தில் அருண்பாண்டியன் என்ற பெயரில் இன்கம்டாக்ஸ் ஆபிஸராக விஜய் நடிப்பதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால் அது படக்குழு தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் படத்தில் விஜயின் கேரக்டர் பெரிய மாஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ. 121 கோடிக்கும், சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி நெட்வொர்க் ரூ. 55 கோடிக்கும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனால் விஜய் நடித்த ஜனநாயகன் படம், ரிலீஸ் ஆவதற்கு பல மாதங்களுக்கு முன்பே 176 கோடி ரூபாய் வசூலித்திருப்பதால் இந்த படம் நிச்சயமாக ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைக்கும் என்று தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுவும் தளபதி நடிக்கும் கடைசி படம் என்பதால் நிச்சயமாக ரூ. 1000 கோடி வசூல் என்பது உறுதி என்றும் தவெக கட்சியினர் உறுதியாக கூறுகின்றனர்.
இந்த சூழலில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு சில வாரங்களுக்கு முன்பே விஜய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு ஜூன் மாதத்தில் விஜய் தனது மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்வது உறுதி என்றும் பயணத்திட்டம் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





