- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருக்கு கார் கொடுத்தா, வேகமா போகும்போது மறந்துடுவாரு, அதனால தேர் கொடுக்கலாம் - ஹீரோ பதிலால்...

அவருக்கு கார் கொடுத்தா, வேகமா போகும்போது மறந்துடுவாரு, அதனால தேர் கொடுக்கலாம் – ஹீரோ பதிலால் நொந்து போன டைரக்டர்

- Advertisement -

சமீபத்தில் திரைக்கு வந்து, வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் மார்க் ஆண்டனி. விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம், கடந்த 15ம் தேதி ரிலீஸ் ஆனது. ஐந்தே நாட்களில் ரூ. 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது.

இதில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து விஷால் பேசியதாவது,
வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்தித்தால் தான், வெற்றிப் பாதைக்கு வரமுடியும். எடுத்தவுடனே வெற்றி என்பது யாருக்குமே சாத்தியமில்லை. நிறைய துன்பங்களை, தோல்விகளை சந்தித்த பிறகு கிடைக்கும் வெற்றி தான் மிகவும் சந்தோஷமாக இருக்கும். அப்போதுதான் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.

- Advertisement -

இரண்டு கோடி, நான்கு கோடி என பணம் வைத்திருப்பவர்கள், தயவு செய்து சினிமா எடுக்கலாம் என்ற ஆசையில் இரண்டு ஆண்டுகளுக்கு இங்கு வராதீர்கள். அந்த பணத்தில் இடம் வாங்குங்கள். பிள்ளைகள், பேரக்குழந்தைகள் பெயரில் டிபாசிட் செய்துவிட்டு சந்தோஷமாக இருங்கள்.

சினிமாவில் வெற்றி பெற ஆண், பெண் என்ற பேதம் எப்போதும் இல்லை. திறமைதான் முக்கியம். திறமை இருந்தால், பெண்களும் இயக்குநர்களாக ஜெயிக்கலாம். சிலர் அப்படி இங்கே ஜெயித்திருக்கிறார்கள். திருமணமானால், மீண்டும் அந்த நடிகைகளுக்கு நடிக்கும் வாய்ப்பு இருக்காது என்பதை நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் உடைத்திருக்கிறார்கள். அதனால், திறமை இருந்தால், பெண்களும் சினிமாவில் சாதிக்கலாம்.

- Advertisement -

ஒரு சினிமா என்பது, வீடு கட்டுவதைப் போல. வீடு கட்ட கதாநாயகன் ஒரு தூண் மட்டுமே போதாது. தயாரிப்பாளர், இயக்குநர், சக நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாருமே இங்கே வேண்டும். அப்படி நிறைய தூண்கள் இருந்தால் தான் வீட்டைகட்ட முடியும். அப்படி தான் இந்த படம், இந்த தூண்களால் உருவானது, என்றார்.

அப்போது, படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பதால் இயக்குநருக்கு கார் கொடுப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், கார் கொடுக்க முடியாது. வேண்டும் என்றால் தேர் கொடுக்கலாம். கார் கொடுத்தால்,வேகமாக ஓட்டிக்கொண்டு, எங்களை மறந்துவிட வாய்ப்புள்ளது. தேர் என்றால், மெதுவாக செல்லும் என, கிண்டலாக கூறினார். இதை அருகில் அமர்ந்து படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டு இருந்தார். ஹீரோவின் இந்த பதில், நிச்சயம் இயக்குநருக்கு சற்று ஏமாற்றத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

சற்று முன்