- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ராஜமவுலி படங்களில் நான் நடிக்காதது ஏன்? வெளிப்படையாக பேசிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்...

இயக்குனர் ராஜமவுலி படங்களில் நான் நடிக்காதது ஏன்? வெளிப்படையாக பேசிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி – ராஜமவுலி இதுக்கு பதில் சொல்வாரா?

- Advertisement -

இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. தெலுங்கு பட இயக்குனராக ராஜமவுலி இயக்கிய படங்கள் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் இந்தி மலையாளம் என பிற மொழிகளிலும் ரசிகர்கள் கொண்டாடும் படங்களாக இருக்கின்றன. பான் இந்தியா படங்களாக அவரது படங்களை ரசிகர்கள் வரவேற்கின்றனர். அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

குறிப்பாக பாகுபலி பாகுபலி 2 ஆர்ஆர்ஆர் நான் ஈ மாவீரன் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த படங்களாக பல நூறு கோடி ரூபாய் வசூலித்தன. இதில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாட்டு ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படம் 2 பாகங்களாக வெளிவந்து அபார வெற்றியை பெற்ற பிறகுதான் பல சரித்திர படங்கள் 2 பாகங்களாக இந்திய சினிமாவில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன்தான் ராம்சரண். ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்திலும், அதற்கு முன்பாக மாவீரன் படத்திலும் ராம்சரண் நாயகனாக நடித்திருக்கிறார். இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றிப் படங்களாக ராம்சரணுக்கு அமைந்திருந்தன.

நடிகர் சிரஞ்சீவி 70 வயதுகளை நெருங்கிய நிலையிலும் இன்னும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்து விஸ்வம்பரா படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில் நடிகை திரிஷா தான் நாயகியாக நடித்திருக்கிறார். அடுத்து இயக்குனர்கள் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் அனில் ரவிபுடி ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க சிரஞ்சீவி கமிட் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவி, பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராஜமவுலி படங்களில் நான் நடிக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதுகுறித்து நடிகர் சிரஞ்சிவி கூறுகையில், ராஜமவுலி ஒரு படத்தை எடுத்து முடிக்க 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்கிறார்.

அத்தனை காலம் என்னால் ஒரே படத்தில் நடிக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நான் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் 3 அல்லது 4 ஆண்டுகள் ஒரே படத்தில் பணிபுரிவது சாத்தியம் இல்லை. அதனால்தான் அவருடன் இணைந்து நான் பணியாற்ற முடியாது என்று சொன்னேன். அதனால்தான் ராஜமவுலி இயக்கும் படங்களில் நான் நடிக்க முடியவில்லை, என்று நடிகர் சிரஞ்சீவி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்