- Advertisement -
Homeபொழுதுபோக்குஏப்ரல் 10ம் தேதி மோதும் அஜீத்குமார் - தனுஷ் படங்கள்; மே 1ம் தேதி யார்...

ஏப்ரல் 10ம் தேதி மோதும் அஜீத்குமார் – தனுஷ் படங்கள்; மே 1ம் தேதி யார் யாருடன் மோதப் போகிறார் தெரியுமா? – தரமான சம்பவம்னா அது இதாம்பா!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், பொங்கல் வெளியீடு இல்லை. விடாமுயற்சி ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்து ஏகே ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

அதே நேரத்தில் ஜனவரி 23ம் தேதி விடாமுயற்சி ரிலீஸ் என்று தகவல்கள் பரவினாலும் இன்னும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்ட விடாமுயற்சி படத்தை வெளியிட, அந்த படத்தை தயாரித்த பாராமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரூ. 30 கோடி வரை நஷ்ட ஈடு கேட்டு விடாப்பிடியாக உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே விடாமுயற்சி படத்தை மார்ச் அல்லது ஏப்ரலுக்கு தள்ளி வைத்தால் தங்களது படத்தின் எதிர்பார்ப்பும், வசூலும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை தெரிந்துக்கொண்ட குட்பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்க்கர்ஸ் நிறுவனமும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் கலந்து பேசி முக்கிய முடிவு எடுத்தனர்.

அதன்படி வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீஸ் என்பதை அதிகாரபூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்து விட்டார். அதே நாளில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த படத்தில் நித்யா மேனன், சத்யராஜ் ராஜ்கிரண் வில்லன் கேரக்டரில் அருண் விஜய் போன்றோர் நடித்துள்ளனர். இட்லி கடை படமும், குட் பேட் அக்லி படமும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகி களத்தில் மோதுவது மிகவும் ஆரோக்கியமான போட்டி என்று சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் வருகிற மே 1ம் தேதி ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படமும் ரிலீஸாக உள்ளது. ரஜினியும், சிவகார்த்திகேயனும் தொழிலாளர் தினத்தில் வெளியாகி, மோத உள்ளனர் என்றும் தகவல் வைரலாகி வருகிறது. அப்படி நடந்தால் அது சரியான தரமான சம்பவம்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்