- Advertisement -
Homeபொழுதுபோக்குபோற இடங்களில் எல்லாம் நடிகர் சூர்யாவை வெறுப்பேற்றும் டைரக்டர் வெற்றிமாறன், இந்த கோணத்தில் யாருமே அப்படி...

போற இடங்களில் எல்லாம் நடிகர் சூர்யாவை வெறுப்பேற்றும் டைரக்டர் வெற்றிமாறன், இந்த கோணத்தில் யாருமே அப்படி யோசிக்கலையே ப்ரோ?

- Advertisement -

நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சீனியர் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்குள் வந்தாலும், நாளடைவில் தனது நடிப்பாற்றலை, திறமையை வெளிப்படுத்தி தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார் நடிகர் சூர்யா.

சூர்யாவை ஒரு நடிகராக, மௌனம் பேசியதே படம் மூலம் மாற்றிய பெருமை இயக்குனர் அமீருக்கும், சூர்யாவை ஒரு ஹீரோவாக நந்தா படம் மூலம் மாற்றிய பெருமை இயக்குனர் பாலாவுக்கும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது அற்புத படைப்பாற்றலாலும், அந்த கேரக்டர்களில் சூர்யாவை மாற்றி காட்டியதாலும் சூர்யா பெரிய நடிகராக முன்னேறினார்.

- Advertisement -

அடுத்து காக்கா, கஜினி, பிதாமகன், வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், வேல், ஏழாம் அறிவு, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களால் ஒரு தரமான ஆக்‌ஷன் நாயகனாக சூர்யா உருவாகி விட்டார். தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே உள்ளிட்ட படங்கள் சூர்யாவுக்கு தோல்வியை தந்தாலும் அவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவர இருக்கும் கங்குவா மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா நடிக்க வேண்டிய புறநானூறு படம், கதை விவாதத்தில் சூர்யாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படியே பிரேக்கப் ஆகி நின்றுவிட்டது. பலகட்டமாக முயற்சிக்கும் அந்த படம் துவங்க மீண்டும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதே போல் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் இருந்தும் சூர்யா, பாதியில் வெளியேறி விட்டதால், அது அருண் விஜய் படமாக போய்விட்டது.

- Advertisement -

இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில், அமீர் நடிப்பதால் பருத்திவீரன் பஞ்சாயத்து காரணமாக, அதில் சூர்யா நடிப்பாரா, மாட்டாரா என்பது நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் சூர்யா, அமீர் சமரசமாகி விட்டதால் சூர்யாவும், அமீரும் சேர்ந்து வாடிவாசல் படத்தில் நடிப்பது உறுதி என கூறப்பட்டது. ஆனால் வாடிவாசல் படத்தில் சூர்யா கேரக்டரில் நடிக்க, தெலுங்கு நடிகர் ராம்சரணை வெற்றி மாறன் சந்தித்து பேசியது பெரிய புயலை கிளப்பியிருக்கிறது.

இந்த தகவலை அறிந்த சூர்யா ஏகப்பட்ட கோபத்தில் இருக்கிறார். வெற்றிமாறன் படமே வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறார். மற்றொரு வலுவான காரணமும் வெற்றிமாறனை வெறுக்க சூர்யாவுக்கு காரணமாக இருக்கிறது. அது, வெற்றிமாறன் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் நடிகர் விஜயை புகழ்ந்து பேசி, அவரை பாராட்டி வருகிறார். சமகாலத்தில் தன்னுடன் நடிக்க வந்த விஜய், இவ்வளவு பெரிய அசுர வளர்ச்சி பெற்றது சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என அவரது குடும்பத்துக்கே பிடிக்காத நிலையில், விஜயை வெற்றிமாறன் அடிக்கடி சிலாகித்து, பெருமையாக பேசுவதும் சூர்யாவுக்கு பயங்கர கடுப்பை தந்திருப்பதால், வாடிவாசல் படத்தில் நடிக்கவே வேண்டாம் என்ற முடிவில் சூர்யா இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்