- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் என ஒருவரையும் விடாமல் ஒட்டுமொத்தமாக அனைத்து படங்களையும் கைப்பற்றுகிறதா அந்த...

அஜித் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் என ஒருவரையும் விடாமல் ஒட்டுமொத்தமாக அனைத்து படங்களையும் கைப்பற்றுகிறதா அந்த பிரபல நிறுவனம்… போடு, இதுதான் சம்பவம்…

- Advertisement -

2025 ஆம் ஆண்டு பொருத்தவரை தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான வருடம் என்றே கூறலாம். ரஜினி கமல்ஹாசன் அஜித் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் தனுஷ் என முக்கியமான நடிகர்களுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் இந்த ஆண்டே வெளியாக இருக்கின்றன. குறிப்பாக அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாகிறது.

ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரிஷா பிரசன்னா பிரபு யோகி பாபு சுனில் ரெடின் கிங்ஸ்லி அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். மைத்திரி மூவிஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதே போல் இந்த ஆண்டு வெளியாகும் திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது விஜய்யின் ஜனநாயகன். தளபதியின் கடைசி திரைப்படமாக இது இருப்பதால் ஒட்டுமொத்த தமிழ்நாடு அல்ல இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு திரைப்படங்கள் உள்ளன. ஒன்று பராசக்தி மற்றொன்று மதராஸி. தற்போது சிவகார்த்திகேயன், பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இது முடிந்த பிறகு மதராசி திரைப்படத்தின் எடுக்க வேண்டிய சில காட்சிகளில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதேபோல் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, இதனை இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் ஹிட் அடித்தது. இந்த நிலையில் முக்கியமான திரைப்படங்களை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குட் பேட் அக்லி, ஜனநாயகன், ரெட்ரோ திரைப்படங்களின் உரிமத்தை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோல் மதராசி திரைப்படத்தின் உரிமம் தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது அனைவரும் அறிந்ததே. இதுபோக கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்திற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

சற்று முன்