- Advertisement -
Homeபொழுதுபோக்குகுஷி, ஷாஜகான் படங்களில் வரும் விஜய்யை மீண்டும் கொண்டு வரும் வெங்கட் பிரபு? தளபதி 68...

குஷி, ஷாஜகான் படங்களில் வரும் விஜய்யை மீண்டும் கொண்டு வரும் வெங்கட் பிரபு? தளபதி 68 படம் குறித்து வெளியான ஆச்சரிய தகவல்!

- Advertisement -

“தளபதி 68” திரைப்படம் குறித்து அனுதினமும் ஒரு தகவல் வெளிவந்துகொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனவும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது.

மேலும் “தளபதி 68” திரைப்படத்தில் இதுவரை விஜய் ஏற்று நடிக்காத வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இத்திரைப்படத்திற்கு CSK என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

- Advertisement -

எனினும் இப்போது வரை இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படம் குறித்து ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இத்திரைப்படத்தில் 1990கள் மற்றும் 2000களில் விஜய் திரைப்படங்களில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் பாடல்களின் ரெபரன்ஸை பயன்படுத்தப்போகிறாராம் வெங்கட் பிரபு. அதாவது 90ஸ் கிட்ஸ்கள் சிறு வயதில் பார்த்து ரசித்த வின்டேஜ் விஜய்யை மீண்டும் “தளபதி 68” திரைப்படத்தில் கொண்டு வரப்போகிறாராம். இவ்வாறு ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இத்தகவலால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் “தளபதி 68” திரைப்படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களை டபுள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருகிற 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு “தளபதி 68” திரைப்படத்தின் பூஜை போடப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

“லியோ” திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்