- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடிமாட்டு விலைக்கு போன ஜெயிலர் திரைப்படம், ரஜினிகாந்த் படத்துக்கு இப்படி ஒரு நிலைமை வரணுமா? பாவத்த

அடிமாட்டு விலைக்கு போன ஜெயிலர் திரைப்படம், ரஜினிகாந்த் படத்துக்கு இப்படி ஒரு நிலைமை வரணுமா? பாவத்த

- Advertisement -

“ஜெயிலர்” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டு இருக்கும் நிலையில், தான்தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று நிரூபிக்கும் திரைப்படமாக “ஜெயிலர்” இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் அத்திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“ஜெயிலர்” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார் என்பது ரசிகர்கள் அறிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமத்தை பெற்றிருக்கிறது. எப்போதும் சன் பிக்சர்ஸ் திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனமே  வெளியிடுவது வழக்கம். இதனை ஒரு பேட்டியில் உதயநிதியே ஒப்புக்கொண்டுள்ளார்.

- Advertisement -

ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில்  “ஜெயிலர்” திரைப்படம் முன்பதிவில் ஒரு கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவருகிறது.

இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்திற்கு மலேசியாவில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாம். மலேசியாவில் பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் “ஜெயிலர்” திரைப்படத்தை ரூ.6 கோடிக்கு வாங்கியிருந்தார்களாம். ஆனால் சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் பிரபல திரைப்பட விநியோகஸ்தர்களின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததாம். இதில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனமும் ஒன்று.

- Advertisement -

ஆதலால் மலேசியாவில் “ஜெயிலர்” திரைப்படம் வெளியாவதில் சிக்கல் இருந்ததாம். மலேசியாவில் ரஜினிகாந்திற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு சிக்கல் நடந்துள்ளதாக தெரிய வந்த பின் அங்குள்ள பல ரசிகர்கள் “ஜெயிலர்” படம் மலேசியாவில் வெளியாகாதோ என்ற சோகத்தில் இருந்தார்களாம்

ஆனால் மலேசியாவில் உள்ள லோட்டஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம், “ஜெயிலர்” படத்தை ஒரு கோடியே 60 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாம். அதாவது மலேசியாவில் முதலில் 6 கோடிக்கு விலைக்கு போன “ஜெயிலர்” திரைப்படம் அடிமாட்டு விலை போல் கடைசியில் ஒரு கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இது படக்குழுவினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

- Advertisement -

சற்று முன்