விஜய் டிவியில் லொள்ளுசபா என்ற காமெடி நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டு இருந்தவர் நடிகர் சந்தானம். அவரை தனது படங்களில் காமெடி ரோல்களில் நடிக்க வைத்து அவரது சினிமா பயணத்துக்கு வழிகாட்டியவர் நடிகர் சிம்பு. மன்மதன் வல்லவன் ஒஸ்தி போன்ற படங்களில் சந்தானம் காமெடி பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.
அடுத்து ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் சியான் விக்ரம் தனுஷ் சூர்யா ஜெயம் ரவி என பல முன்னணி ஹீரோக்களுடன் காமெடி செய்து முன்னணி காமெடி நடிகராக சந்தானம் மாறினார். குறிப்பாக லிங்கா சச்சின் கிரீடம் ஐ பொல்லாதவன் உனக்கும் எனக்கும் என பல படங்களில் சந்தானம் காமெடி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டா ஆர்யாவுடன் அவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் ஜீவாவுடன் நடித்த சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் சந்தானத்துக்கு தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுத் தந்தது.
அதன்பிறகு ஹீரோவாக மாறிய நடிகர் சந்தானம் தில்லுக்கு துட்டு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஏ ஒன் வடக்குப்பட்டி ராமசாமி டிக்கிலோனா சபாபதி லட்டு தின்ன ஆசையா என பல படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால் மதகஜ ராஜா படத்தில் அவரது காமெடியை ரசித்த ரசிகர்கள், மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்க சந்தானத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49வது படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கிறார். நடிகர் சிம்பு சந்தானத்துக்கு போன் செய்து, நான் நடிக்கும் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் எந்த கேள்வியும் கேட்காமல் உடனே நேரில் வந்து சிம்புவை சந்தித்திருக்கிறார் நடிகர் சந்தானம். மேலும் இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்க உடனே ஓகே சொல்லி இருக்கிறார்.
அப்போது எஸ்டிஆர் 49 படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் பேசிய நடிகர் சிம்பு, இந்த படத்தில் நடிகர் சந்தானம் கேரக்டர் எந்த இடத்திலும் டேமேஜ் ஆகக் கூடாது. அவர் நாயகனாக நடிப்பவர். அதனால் அவரது இமேஜ் பாதிக்காத வகையில் எனக்கு சமமான காமெடி ரோலில் அவரை நடிக்க வையுங்கள். படம் முழுவதும் அவரது பங்களிப்பு மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்று கண்டிஷனாக கூறியிருக்கிறார்.





