- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள்… தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட...

இன்று சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள்… தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை – பாலவாக்கத்துக்கு நேரில் சென்ற தளபதி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ஜனநாயகன் படத்துக்கு பிறகு நடிப்பதில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். இதுதான் அவரது கடைசி படம். இந்த படம் வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் வருகிற மே 15ம் தேதியுடன் படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது.

நடிகர் விஜய் நடத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் கொள்கைத் தலைவர்களாக தந்தை பெரியார் சட்டமேதை அம்பேத்கர் கர்மவீரர் காமராஜர் வீரமங்கை வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள் ஆகியோர் உள்ளனர். அவர்களது கொள்கைகளை கோட்பாடுகளை பின்பற்றி தன் கட்சியை அவர் செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று சட்டமேதை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 135வது பிறந்த நாளாகும். இன்று அரசியல் தலைவர்கள் பலரும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளையொட்டி சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது திருகுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

சட்ட உரிமைகள் மட்டும் இல்லை, சமூகநீதி சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம் என்று அந்த பதிவில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

சற்று முன்