- Advertisement -
Homeபொழுதுபோக்குபல நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர், வெற்றி பெறுகின்றனர் - நான் அரசியலுக்கு வருவேனா? வெளிப்படையாக பேசிய...

பல நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர், வெற்றி பெறுகின்றனர் – நான் அரசியலுக்கு வருவேனா? வெளிப்படையாக பேசிய நடிகர் ரவி மோகன்!

- Advertisement -

எடிட்டர் மோகனின் இளைய மகன் ஜெயம் ரவி. இவரது அண்ணன்தான் மோகன் ராஜா. ஜெயம் படத்தில் அறிமுகமானதால் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். ஜெயம் படத்தை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தனி ஒருவன் போகன் உள்ளிட்ட படங்களை அண்ணன் மோகன் ராஜா இயக்க, தம்பி ஜெயம் ரவிதான் நடித்தார். சமீபத்தில் தனது ஜெயம் ரவி என்கிற தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார்.

ஆரம்பத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்த ரவி மோகனுக்கு கடந்த பல ஆண்டுகளாவே தொடர்ந்து படங்கள் பிளாப் ஆகி வருகின்றன. இயக்குனர்கள் கதை சொல்கிற மாதிரி படங்களை எடுப்பதில்லை என வெளிப்படையாகவே தனது ஆதங்கத்தை ஜெயம் ரவி கூறியிருந்தார். எனினும் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் 2ம் பாகங்களில் ஜெயம் ரவி நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

- Advertisement -

அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் என ரவி மோகன் நடிப்பில் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தன. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நித்யா மேனன் நடித்த காதலிக்க நேரமில்லை படமும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனது மனைவி ஆர்த்தியை ரவி மோகன் பிரிந்துவிட்டதாக அறிவித்தார். தொடர்ந்து சென்னைனயில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை இப்போது நடந்து வருகிறது. இருவருமே பரஸ்பரம் விவாகரத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரவிமோகன் பேசியதாவது, இந்த கூட்டத்தில் அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டு இருக்கிறீர்கள். அதேபோல் தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் சிலர் அரசியல்வாதிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

அதைப் பார்த்து நீங்களும் அரசியலுக்கு வரப் போகிறீர்களா என்று இங்கு சிலர் என்னிடத்தில் கேட்டார்கள். என்னை பொறுத்தவரை எந்த காலத்திலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அதற்கெல்லாம் சான்ஸே இல்லை. தொடர்ந்து சினிமாவில் நடிகராக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்று நடிகர் ரவி மோகன் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்