தமிழ் சினிமாவில் அவ்வப்போது பிறமொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் சில காட்சிகளில் நடிக்கின்றனர். கேமியோ ரோலில் வருகின்றனர். சில நேரங்களில் வில்லன் கேரக்டர், குணச்சித்திர கேரக்டர்களிலும் நடிக்கின்றனர். ஓரிரு படங்களில் நடித்தாலும் கூட அவர்களது நடிப்பும், தோற்றமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.
அந்த வகையில் கன்னட நடிகர் சுதீப், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நான் ஈ படத்தில், வில்லன் கேரக்டரில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதில் நானி நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் நடித்திருந்தனர்.
சமந்தா மீது காதல் கொள்ளும் சுதீப், சமந்தாவை அடைவதற்காக நானியை கொலை செய்து விடுவார். பின்னர் ஈ வடிவில் பிறவி எடுத்து வரும் நானி, சமந்தா உதவியுடன் சுதீப்பை பழிவாங்குவதுதான் கதை. வில்லனை பழிவாங்கும் ஹீரோவாக ஈ நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. சுதீப் நடிப்பும் வேற லெவலில் இருந்தது.
அதன்பிறகு சுதீப் தமிழில் பல படங்களில் நடித்தார். குறிப்பாக சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பாகுபலி படத்தில், சில காட்சியில் அரசனாக வருவார். தமிழில் கமல் நடித்த சிப்பிக்குள் முத்து படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்தபோது கமல் கேரக்டரில் சுதீப், ராதிகா கேரக்டரில் மீனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்திலும் சுதீப் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சுதீப் தெலுங்கு, தமிழ், இந்தி என பிறமொழிகளில் நடித்திருக்கிறார். பல விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் பின்னணி பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர்.
தமிழ் சினிமாவில் சுதீப் நடிக்க பல வாய்ப்புகள் தேடி வருகிறது. ஆனால் தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம், தன்னை தர லோக்கல் அளவுக்கு பெரிய பில்டப்பு செய்து திரையில் காட்டுமாறு சுதீப் வலியுறுத்துகிறார். அவர் தரையில் காலடி வைத்தாலே 10 டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறுவது போலவும், பூகம்பம் வெடிப்பது போலவும் தன்னை பெரிய அளவில் பில்டப்பு செய்து காட்டுமாறு சுதீப் கூறுவதால் தமிழ் சினிமா இயக்குனர்கள் தலை தெறிக்க ஓடி விடுகின்றனர் என்று சினிமா மூத்த பத்திரிகையாளர் அந்தணன் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





