- Advertisement -
Homeபொழுதுபோக்குஉயிரை பணயம் வைத்து இந்த ரிஸ்க் தேவைதானா? - தொடர்ந்து விபத்தில் சிக்கி ரசிகர்களை பயமுறுத்தும்...

உயிரை பணயம் வைத்து இந்த ரிஸ்க் தேவைதானா? – தொடர்ந்து விபத்தில் சிக்கி ரசிகர்களை பயமுறுத்தும் நடிகர் அஜீத்குமார்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் ரூ. 200 கோடி வசூலை கடந்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே நடிகர் அஜீத்குமாருக்கு பைக் ரேஸில் அதிக ஆர்வம் இருந்தது. 18 வயதில் இருந்தே அவர் பைக் ரேஸ்களில் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒருமுறை பைக் ரேஸ் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அஜீத்குமாருக்கு முதுகுதண்டுவட பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு 1.5 ஆண்டுகள் மருத்துவ சிகிச்சையில் படுக்கையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அவள் வருவாளா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்த போது அஜீத்குமார் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். இந்த பிரச்னையால் இயக்குனர் விக்ரமன் இயக்கிய புதிய மன்னர்கள் படத்தில் கூட அஜீத்குமார் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதை விக்ரமன் ஒரு நேர்காணலில் அவரே கூறியிருந்தார்.

இப்போது நடிகர் அஜீத்குமார் ஒரு படத்துக்கு ரூ. 165 கோடி வரை சம்பளம் வாங்கும் பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். அவரது கால்சீட்டுக்காக பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களும், முன்னணி இயக்குனர்களும் காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த ஜனவரி முதல் வருகிற அக்டோபர் வரை 10 மாதங்களுக்கு அவர் 10 நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்கிறார். இப்போது 4வது மாதமாக ரேஸில் கலந்துக்கொண்டிருக்கிறார்.

இதுவரை நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ்களில் பங்கேற்ற வகையில் 4 முறை மிக மோசமான விபத்துகளை சந்தித்திருக்கிறார். இதுவரை 3 முறை கார் ரேஸ் பயிற்சியின் போதும் ஒரு முறை கார் ரேஸின் போதும் இந்த விபத்துகள் நடந்திருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியிருக்கிறார்.

ஆனால் ஒவ்வொரு முறையும் அஜீத்குமார் கார் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், அதிர்ச்சியும் பலத்த மன வேதனையும் அடைகின்றனர். எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று பிரார்த்தனை செய்கின்றனர். இத்தனை ரிஸ்க் எடுத்து உயிரை பணயம் வைத்து இந்த கார் ரேஸில் அஜீத்குமார் 50 வயது கடந்த நிலையில் பங்கேற்பது அவசியம்தானா என்றும் பல ரசிகர்கள் ஆதங்கமாக கூறுகின்றனர். ரஜினி கமல் போன்ற மூத்த நடிகர்கள், அவரது மனைவி ஷாலினி போன்றவர்கள் அஜீத்குமாருக்கு அட்வைஸ் செய்யலாமே என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சற்று முன்