- Advertisement -
Homeபொழுதுபோக்குஊர் முழுக்க ஹிட் அடித்த கனிமா பாடல்... சிம்பு படத்தின் பாடலில் இருந்து ஈர்க்கப்பட்டதாக காரணம்...

ஊர் முழுக்க ஹிட் அடித்த கனிமா பாடல்… சிம்பு படத்தின் பாடலில் இருந்து ஈர்க்கப்பட்டதாக காரணம் கூறிய சந்தோஷ் நாராயணன்… ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களில் மிக மிக முக்கியமானவர் சந்தோஷ் நாராயணன். இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இவரது பயணம் ஆரம்பித்தது. அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சந்தோஷ் நாராயணன், அதில் ஒவ்வொரு பாடல்களையும் தெறிக்க விட்டிருந்தார். ஒரு இசையமைப்பாளருக்கு இது முதல் படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த திரைப்படத்தின் பாடல்கள் அமைந்தன.

இங்கிருந்து தான் சந்தோஷ் நாராயணனின் வெற்றி பயணம் ஆரம்பித்தது. தொடர்ந்து, ரஞ்சித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த அவர் அங்கிருந்து பல காவியங்களுக்கும் பயணப்பட ஆரம்பித்தார். மெட்ராஸ், கபாலி, காலா திரைப்படங்கள் மூலம் தான் யார் என்பதை நிரூபித்தார் சந்தோஷ நாராயணன்.

இது போக ஆரம்ப காலகட்டத்தில் சூது கவ்வும் திரைப்படத்திற்கும் இசையமைத்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். அந்தப் படத்தின் தீம் மியூசிக் பலரது ரிங்டோன் ஆகவும் அப்போது ஒலித்தது. இதேபோல் ஜிகர்தண்டா திரைப்படத்திலும் சந்தோஷ் நாராயணனின் இசையை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

இறுதிச்சுற்று, காதலும் கடந்து போகும், மனிதன் என தான் கம்மிட்டான படங்களில் எல்லாம் சிக்ஸர் விளாசினார் சந்தோஷ் நாராயணன். தற்போது கார்த்திக் சுப்புராஜ் சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாகிறது.

இதில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இதன் டீசர் மற்றும் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் முணுமுணுக்க வைத்தன. குறிப்பாக கனிமா பாடல் பலருக்கும் பேவரைட் பாடல் ஆனது.

குறிப்பாக அதில் பூஜாவின் நடன அசைவுகள் பலரையும் கவர்ந்தன. இணையத்திலும் ட்ரெண்டானது. இந்த நிலையில், மன்மதன் படத்தில் இடம்பெற்ற என் ஆச காதலியே பாடலின் மூலம் ஈர்க்கப்பட்டு கனிமா பாடலுக்கு இசை அமைத்ததாக கூறி இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். குறிப்பாக அந்தப் பாடலில் இடம் பெற்ற இசைக்கலவை தன்னை ஈர்த்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சற்று முன்