- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்டிஆர் 49 படம் குறித்த சுடச்சுட வெளியான 2 சூப்பர் அப்டேட்டுகள் - போட்றா வெடிய...

எஸ்டிஆர் 49 படம் குறித்த சுடச்சுட வெளியான 2 சூப்பர் அப்டேட்டுகள் – போட்றா வெடிய என குதூகலித்த சிம்பு ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கிறார். அசோக் செல்வன் அபிராமி மற்றும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் 16ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்கு முன்பாக வருகிற மே மாதம் 7ம் தேதி செகன்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. ஏஆர் ரகுமானின் இசையில் உருவான இந்த பாடல் சூப்பரான மெலோடி சாங் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் சிம்பு 3 படங்களில் நடிப்பதாக அவரது பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி அறிவித்தார். அதன்படி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் காமெடி ரோலில் சந்தானம் நடிக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், இந்த படத்தில் மீண்டும் காமெடி ரோலில் நடிப்பது நடிகர் சிம்புவுக்காக மட்டுமே. ஏனெனில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி ஷோவில் நடித்துக்கொண்டிருந்த சந்தானத்தை தனது வல்லவன் மன்மதன் படங்களில் நடிக்க வாய்ப்பு தந்து அவரை சினிமா நடிகராக்கியதே நடிகர் சிம்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இந்த படத்தில் சந்தானம் படம் முழுவதும் வருவது போலவும், படத்தில் அவரது ஹீரோ இமேஜூக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அவரது கேரக்டரை கொண்டு வரவும் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு சிம்பு கண்டிப்பாக கூறியிருக்கிறார். அதனால் சந்தானம் ஹீரோ காமெடியன் இரண்டுக்கும் நடுவிலான ஒரு சூப்பர் கேரக்டரில் நடிக்கிறார்.

மேலும் இந்த படம் குறித்த 2 முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்க உள்ளது. இந்த படத்தில் நாயகியாக டிராகன் படத்தில் நடித்த கயாடு லோஹர்தான் நடிக்க உள்ளார். இதுகுறித்து படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்