- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் தாத்தாவாக நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு உண்மையில் தாத்தா ஆக வாய்ப்பே இல்லையா? - மகள்...

இந்தியன் தாத்தாவாக நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு உண்மையில் தாத்தா ஆக வாய்ப்பே இல்லையா? – மகள் ஸ்ருதிஹாசன் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே அவர் நடிக்கும் கேரக்டர்களில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். குறிப்பாக புன்னகை மன்னன் வேலு நாயக்கர் சகலகலா வல்லவன் இந்தியன் தாத்தா அவ்வை சண்முகி 16 வயதினிலே சப்பாணி அபூர்வ சகோதர்கள் அப்பு போன்றவை அவர் நடித்த கேரக்டர்களின் அடையாளமாக அவருக்கு இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் தாத்தா கேரக்டர் யாராலும் மறக்க முடியாதது. இந்தியன் 2 படம் தோல்வி அடைந்தாலும் இந்தியன் படத்தின் புகழ் என்றென்றும் கமலுக்கு மறையாது. அதில் சேனாபதி கேரக்டரில் இந்தியன் தாத்தாவாக கமல் வாழ்ந்திருந்தார்.

- Advertisement -

நடிகர் கமலுக்கு ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. இதில் ஸ்ருதிஹாசனுக்கு 39 வயது ஆகிறது. சில மாதங்களுக்கு முன் இந்தியன் 2 பட விழாவில் பேசிய கமல், ஸ்ருதிஹாசன் நினைத்திருந்தால் உண்மையிலும் நான் தாத்தா ஆகியிருப்பேன் என்று தன் ஆசையை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழில் இந்தி தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் பல ஆண்டுகளாகவே மும்பையில் வசித்து வருகிறார். அடிக்கடி அவர் காதல் கிசுகிசுகளில் சிக்கிக் கொள்கிறார். ஆனால் அவர் இரண்டு பேரை தனது நெருக்கமான காதலர்கள் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஒருவர் ஆங்கில நடிகர் மைக்கேல் கோர்செல். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தனது அப்பா கமலஹாசனிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் சிறிது நாட்களிலேயே அவர்கள் பிரிந்து விட்டனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து ஓவியர் சாந்த ஹசரிகா என்பவரை ஸ்ருதிஹாசன் காதலித்தார். இருவரும் லிவிங் டு கெதராக சில ஆண்டுகள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தனர். தனது வீட்டில் தனது காதலர் சாந்த ஹசரிகாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் சுருதிஹாசன் வெளியிட்டார். ஆனால் சமீபத்தில் அவரும் பிரிந்து விட்டார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஸ்ருதிஹாசன் கூறுகையில், நான் இப்போது முழுமையான சிங்கிள். யாருடனும் மிங்கிள் ஆக விரும்பவில்லை. நடித்துக் கொண்டே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். யாருடனும் மிங்கிள் ஆக விரும்பவில்லை என்று ஸ்ருதிஹாசன் சொல்வதில் இருந்தே நிச்சயமாக கமல்ஹாசன் நிஜத்தில் தாத்தாவாக போவதில்லை என்று அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்