- Advertisement -
Homeபொழுதுபோக்குநீ நீயாகவே இரு… இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை சமந்தாவுக்கு பிரபல தமிழ்...

நீ நீயாகவே இரு… இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை சமந்தாவுக்கு பிரபல தமிழ் நடிகை சொன்ன வாழ்த்து!

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் தெறி கத்தி தங்கமகன் 10 எண்றதுக்குள்ள அஞ்சான் நடிகையர் திலகம் காத்துவாக்குல ரெண்டு காதல் நீதானே என் பொன்வசந்தம் சீமராஜா என பல படங்களில் நடிகை சமந்தா நடித்திருக்கிறார். நல்ல அழகான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார்.

தமிழ் தெலுங்கு மொழிகளை தொடர்ந்து இப்போது இந்தியிலும் சமந்தாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் நடித்த சிட்டாடல் என்ற வெப் சிரீஸ் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மீண்டும் இந்தியில் ஒரு வெப் சீரிஸில் சமந்தா நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்தார். 4 ஆண்டுகளில் அந்த திருமண வாழ்வு கசந்ததால் விவாகரத்து பெற்றார். அப்போது மயோசிடிஸ் என்ற தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட அவர் பலவிதமான போராட்டங்களை சந்தித்து குணமாகி மீண்டும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் விஜய் அஜீத்குமார் சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு நாயகியாக நடிக்கிறார். இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவும் வலம் வருகிறார்.

நடிகை திரிஷாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருமே திருமண வாழ்க்கையை விட சினிமா வாழ்க்கையை பெரிதாக நினைப்பவர்களாக உள்ளனர். அதனால்தான் நடிகை திரிஷா இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். சமந்தாவும் 2வது திருமணம் குறித்து யோசிக்காமல் இருக்கிறார்.

இன்று நடிகை சமந்தா தனது 38வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சினிமா துறை சார்ந்த பலரும் அவருக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இதில் நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், நீ நீயாகவே இரு! ஏனென்றால் இந்த உலகிற்கு உன்னைப் போன்ற நன்மைகள் மிகவும் அவசியம் என்று கூறி சமந்தாவை வாழ்த்தி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்