தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இயக்குனர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் சில காட்சிகளில் நடித்த அவர் அடுத்து இயக்குனர் அமீர் இயக்கிய ராம் மற்றும் பருத்திவீரன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து பல ஹீரோக்களின் படங்களில் கஞ்சா கருப்பு நடித்து வரவேற்பை பெற்றார்.
குறிப்பாக தாமிரபரணி வேங்கை அறை எண் 305ல் கடவுள் சண்டக்கோழி அழகிய தமிழ்மகன் சுப்ரமணியபுரம் களவாணி நாடோடிகள் தெனாவெட்டு வம்சம் பாண்டி தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் கஞ்சா கருப்பு காமெடி நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். குறிப்பாக அறை எண் 305ல் கடவுள் படத்திலும் சந்தானம் கஞ்சா கருப்பு இருவரும் இரட்டை நாயகர்களாக நடித்திருந்தனர்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது, அழகிய தமிழ் மகன் ஷூட்டிங்கில் விஜயுடன் நான் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது நான் போனில் கத்தி பேசிக்கொண்டு இருந்தேன். அதை அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். நான் பேசி முடித்த பிறகு என்ன பிராப்ளம் என்று கேட்டார்.
நான் ஒரு படத்துக்கு தேதி கொடுத்திருந்தேன். அதுக்கு ஒன்றரை லட்சம் ரூபா பணம் மேன்ஷனுக்கு கட்டீட்டாங்களாம். அதை திருப்பி கேட்கறாங்க என்று சொன்னேன். நான் சென்னைக்கு ஷூட்டிங் வந்து சேரும்போது அந்த ஒன்றரை லட்சம் ரூபா பணத்தை கவர்ல போட்டு கொடுத்து விட்டுட்டார்.
அவர் கஷ்டப்படற மனுஷன். நமக்காக தான் இங்க நடிக்க வந்துட்டார். இவங்க சைடு தப்பா அவங்க சைடு தப்பான்னு தெரியலே. அதனால் இவர் சம்பளம் கிடைக்காம போயிடக் கூடாதுன்னு அந்த பணத்தை விஜய் கொடுத்துட்டார். அடுத்த நாள் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன ஒடனே, தெய்வமே ரொம்ப நன்றி என்று சொன்னேன்.
எதுக்கு நன்றி சொல்றீங்க, நீங்க இங்க மாட்டீட்டிங்க. அவங்க தப்பு பண்ணுனாங்களா, இவங்க தப்பு பண்ணுனாங்களா தெரியாது. என்னால முடிஞ்ச உதவி, அதை நான் செஞ்சுட்டேன் அப்படீன்னு ஒரே வார்த்தையில் விஜய் சொல்லிட்டார். அவர் யார் கிட்டயும் பேசவே மாட்டார். ஆனா எல்லாத்தைம் நோட் பண்ணுவார். புரட்சித் தலைவர் எப்படி இருந்தாரே அந்த பாணியில் அவர் வந்துட்டு இருக்கிறார் என்று நடிகர் கஞ்சா கருப்பு கூறியிருக்கிறார்.





