- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் ஹீரோ ஆகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - படத்தின் தயாரிப்பு நிறுவனம், டைரக்டர் யாரென்று...

விரைவில் ஹீரோ ஆகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – படத்தின் தயாரிப்பு நிறுவனம், டைரக்டர் யாரென்று தெரியுமா? போட்றா வெடிய!

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ். கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு என்ற பகுதியை சேர்ந்தவர். கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்த லோகேஷ் கனகராஜ், கல்லூரியில் படித்த நாட்களில் பல குறும்படங்களை இயக்கியவர். அந்த கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜூம் அவரை பாராட்டி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணிசெய்யாமல் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம் மாபெரும் வெற்றியை பெற்றது. அடுத்து கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய கைதி படமும் மாஸ் ஹிட் படமாக இருந்தது. அடுத்து விஜய் படத்தில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பிறகு கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கினார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு விக்ரம் படம் பெரிய கம்பேக் தந்த நிலையில், சொகுசு கார் ஒன்றை லோகேஷ் கனகராஜூக்கு கமல் பரிசளித்தார். அடுத்து விக்ரம் 2 படமும் உருவாக இருக்கிறது. இந்த படத்துக்கு விக்ரம் ரிட்டர்ன்ஸ் என்ற டைட்டில் வைக்கவும் முடிவாகி விட்டது. இதற்கிடையே கமல் மகள் ஸ்ருதிஹாசனுடன் ஒரு இசை ஆல்பத்திலும் லோகேஷ் நடித்துவிட்டார்.

விக்ரம் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை அவர் இயக்கினார். ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இந்த படம் விமர்சன ரீதியாக பலத்த தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 14ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

அடுத்து கைதி 2 விக்ரம் ரிட்டர்ன்ஸ் ரோலக்ஸ் போன்ற படங்கள் லோகேஷ் கனகராஜின் லைன் அப்பில் இருந்து வருகின்றன. மேலும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் சிலரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை தங்களது படங்களை இயக்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். கதைகளும் கேட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஆனால் இந்த படத்தை டைரக்ட் செய்யப் போவது மிக பிரபலமான ஒரு இயக்குனர்தான். இதில் ஹீரோ மட்டுமே லோகேஷ் கனகராஜ். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.

சற்று முன்