- Advertisement -
Homeபொழுதுபோக்குமலைப்பகுதியில் நடந்த ஜனநாயகன் ஷூட்டிங், முகம் சுளிக்காமல் அந்த சிரமத்தை பொறுத்துக்கொண்ட நடிகர் விஜய்...

மலைப்பகுதியில் நடந்த ஜனநாயகன் ஷூட்டிங், முகம் சுளிக்காமல் அந்த சிரமத்தை பொறுத்துக்கொண்ட நடிகர் விஜய் – தளபதி எப்பவுமே வேற லெவல்தான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் ஒரு படத்தில் நடிக்க 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் மட்டும்தான். சீனியர் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் கூட இன்னும் 150 கோடி ரூபாய்தான் சம்பளம் வாங்கி வருகின்றனர். நடிகர் அஜீத்குமார் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க 163 கோடி ரூபாய் வாங்கினார் என்று சொல்லப்பட்டது.

நடிகர் விஜய்தான் இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். ஜனநாயகன் படத்துக்கு பிறகு அவர் தமிழக அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வரும் கடைசி படம் ஜனநாயகன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை மற்றும் பனையூரில் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் முக்கிய சில காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.

இந்த சூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை வந்தார். பிறகு அங்கிருந்து காரில் கொடைக்கானலுக்கு சென்றார். கொடைக்கானலில் தாண்டிக்குடி என்ற பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பங்களாவில் தங்கி இருந்து கொண்டு அங்கிருந்து நடிகர் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

- Advertisement -

நேற்று 3வது நாளாக தகவுமலை என்ற பகுதியில் ஜனநாயகன் படப்பிடிப்பு நடந்தது. நடிகர் விஜய் தங்கிய இடத்திலிருந்து சில கிலோமீட்டர் வரை கரடு முரடான மலைப்பாதையில் ஜீப்பில் பயணம் செய்த விஜய் அங்கிருந்து பாதை இல்லாத காரணத்தால் ஜீப்பில் இருந்து இறங்கி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே படப்பிடிப்பு தளத்துக்கு சென்றார். அங்கிருந்து தகவுமலை நாதன் சிவன் கோவிலை அடைந்த அவர் சிறிது நேரம் கோவிலில் ஓய்வெடுத்து விட்டு பின்னர் அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பை முடித்துக்கொண்டு பிறகு மீண்டும் 3 கிலோமீட்டர் நடந்து வந்து பின்னர் ஜீப்பில் ஏறி தாண்டிக்குடிக்கு திரும்பினார். படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் விஜய் இன்று சென்னைக்கு திரும்பியுள்ளார். வழக்கமாக ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து விட்டாலே அலப்பரை செய்யும் ஹீரோக்களுக்கு மத்தியில் மலைப்பகுதியில் 6 கிமீ நடந்து தன் எளிமையை வெளிப்படுத்திய நடிகர் விஜய் எப்பவுமே தளபதிதான் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்