இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ்குமார். இவர் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தாய்மாமா போலவே இசையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களை அசத்தினார். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
குறிப்பாக ஜீவி பிரகாஷ்குமார் இசையில் வெளியான ஆடுகளம் கிரீடம் ஆயிரத்தில் ஒருவன் தலைவா ராஜா ராணி தெறி அங்காடித் தெரு அசுரன் அமரன் ஓரம்போ தங்கலான் சர்தார் ஓரம்போ வீரதீர சூரன் லக்கி பாஸ்கர் என பல படங்களுக்கு ஜீவி பிரகாஷ்குமார்தான் இசையமைத்திருக்கிறார். அவர் நடிக்கும் படங்களுக்கும் அவரே பல படங்களுக்கு இசையமைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பயணத்தை துவங்கிய ஜீவி பிரகாஷ்குமார் ஒரு கட்டத்தில் நடிகராகவும் மாறினார். டார்லிங் குப்பத்து ராஜா நாச்சியார் பென்சில் திரிஷா இல்லேனா நயன்தாரா செம ஜெயிலர் சிவப்பு மஞ்சள் பச்சை என பல படங்களில் நடித்தார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அவரது 25வது படம் கிங்ஸ்டன். எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் நாயகியாக திவ்யபாரதி நடித்திருந்தார்.
கடந்தாண்டில் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜீவி பிரகாஷ்குமார் அறிவித்தார். இருவரும் சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். இதற்கும் ஜீவி பிரகாஷ்குமாருக்கும் சைந்தவிக்கும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மகள் ஒருவர் இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
நடிகராக இசையமைப்பாளராக உள்ள ஜீவி பிரகாஷ்குமார் நடித்த இடிமுழக்கம் என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. படக்குழு தரப்பில் இருந்து இடிமுழக்கம் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜீவி பிரகாஷ்குமார் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஜீவி பிரகாஷ்குமார் நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை ஏகே பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் நாயகியாக டிராகன் படத்தில் அறிமுகமான நடிகை கயாடு லோஹர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





