- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு படத்துக்கு இசையமைக்க 5 இசையமைப்பாளர்கள், சினேகா நடித்த அந்த படத்திலும் இப்படி ஒரு...

ஒரு படத்துக்கு இசையமைக்க 5 இசையமைப்பாளர்கள், சினேகா நடித்த அந்த படத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

ஒரு திரைப்படத்தில் பாடல் காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளில் பின்னணி இசை மிகவும் முக்கியமானது. அதனால் இசையமைப்பாளர் அந்த படத்தின் வெற்றிக்கு மிகவும் ஆதாரமாக இருக்கிறார். ஒரு படத்துக்கு சில நேரங்களில் 2 இசையமைப்பாளர்கள் இசையமைப்பது உண்டு. பாடல்களுக்கு ஒருவரும் பின்னணி இசைக்கு ஒருவரும் என நியமிக்கப்படுவதுண்டு.

நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடித்த ஒரு நாள் கூத்து என்ற படத்தை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். இவர் எஸ்ஜே சூர்யா நடித்த மான்ஸ்டர் படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா என்ற படத்தின் இயக்குனரும் இவர்தான். இந்த படங்கள் ஓரளவுக்கு ரசிகர்களின் கவனம் பெற்ற படங்கள்தான்.

அடுத்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் டிஎன்ஏ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நாயகனாக அதர்வா நாயகியாக நிமிஷா சஜயன் நடித்து வருகின்றனர். க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. பல ஆண்டுகளாக அதர்வா நடிப்பில் படம் எதுவும் வெளியாகாத நிலையில் இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒரு படத்துக்கு ஒருவர்தான் இசையமைப்பாளராக இருப்பதுதான் வழக்கம். சில படங்களில் 2 பேர் இசையமைத்திருக்கின்றனர். ஆனால் டிஎன்ஏ படத்தில் சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் என 5 பேர் இணைந்து இசையமைத்து இருக்கின்றனர். வழக்கமாக க்ரைம் திரில்லர் படங்களில் அதிக பாடல்கள் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கப்படும் டிஎன்ஏ படத்தில் இப்படி 5 பேருக்கு இயக்குனர் இசையமைக்க வாய்ப்பு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக ஓடும் இரண்டரை மணி நேர படத்தில் ஆளுக்கு அரை மணி நேரம் என பிரித்துக்கொண்டு இசையமைப்பார்களா என்ற கேள்வியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான படம் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே. நடிகர் ஷாம் நடிகை சினேகா நடித்த இந்த படத்துக்கு ரமேஷ் விநாயகம், ஸ்ரீநிவாஸ், முருகவேல், அரவிந்த் சங்கர், ராகவ் ராஜா என 5 பேர் இசையமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது ஜாலியான காதல் படம். இப்போது உருவாகி வரும் டிஎன்ஏ படம் க்ரைம் திரில்லர் படம் என்று சொல்லப்படுகிறது.

சற்று முன்